தமிழகத்தில் தற்போது தலைதூக்கி வரும் பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரக பாதிப்பு. பெரியவர்கள் முதல் சிறியவர் என அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனையாக இது உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய நல்வாழ்வு குழும நிதி பங்களிப்புடன் இணைந்து சென்னை மருத்துவ கல்லூரியின் சிறுநீரகவியல் துறை, கடந்த ஆண்டில் ஆய்வு ஒன்றை நடத்த தொடங்கியது. சுமார் 500 நபர்களை கொண்ட இந்தக்குழு, தமிழ்நாட்டில் தோராயமாக சில மக்களின் சிறுநீர் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவு வெளியாகி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


தமிழ்நாட்டு தழுவிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்:




மக்களிடையே காணப்படும் சிறுநீரக பாதிப்பு குறித்தான தகவல்களை அறிவதற்கு அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. தேசிய நல்வாழ்வு குழும நிதி பங்களிப்புடன் இணைந்து சென்னை மருத்துவ கல்லூரியின் சிறுநீரகவியல் துறை, கடந்த ஆண்டில் இந்த ஆய்வை நடத்த தொடங்கியது. 500 பேர் கொண்ட பொது சுகாதாரத்துறை குழு தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட சுமார் 4,682 நபர்களில் சிறுநீர் மாதிரிகள் சேசரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 53 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருப்பது எனும் அதிர்ச்சி ஊட்டும் தகவல் வெளிவந்ததுள்ளது.  இதில் பாதிப்பு அடைந்தவர்களில் பெரும்பாலானோர் அமைப்பு சாரா பணிகளில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக இதில் விவசாயிகள் மற்றும் கட்டிடத் தொழிலாளிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தற்போது அமைப்பு சாரா பணிகளில் ஈடுபடுவோரின் சிறுநீரக செயல்திறனை அறிவதற்காக ஆய்வை முன்னெடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


தமிழ்நாடு அரசின் அபார செயல்:


 



 


இந்த நிலையில் கிடைக்கப்பெற்ற ஆய்வின் தகவலை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டின் பொது சுகாதாரத் துறை சார்ப்பில் மாநிலம் முழுவதிலும் உள்ள மக்களுக்குச் சிறுநீரக பாதிப்பு குறித்து அறிவதற்கான பரிசோதனையைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இது குறித்து பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை இயக்குநர் டாக்டர் செல்விநாயகம்  கூறியதாவது “தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் மொத்தம் 2,286 நிலையங்களிலும் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பரிசோதனையில் வருபவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதில் புரதம் அதிகம் உள்ளதா என முதல் கட்ட பரிசோதனை நடத்தப்படும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அடுத்தகட்டமாக யூரியா, கிரியாட்டியின் போன்ற அளவுகள் பரிசோதிக்கப்படும். இப்படி இரண்டு கட்ட பரிசோதனைக்குப் பிறகு சிறுநீரக பதிப்பு இருந்தால் நிறுநீரகவியல் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும். இச்சோதனை வாயிலாக சிறுநீரக பாதிப்பு குறித்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை பெறலாம். இப்படி பரிசோதனை செய்வதன் மூலம் டயாலிசிஸ் செய்வோர் அளவை குறைக்கலாம்” என்றார்.