ஒவ்வொரு மூளையும் வயதுக்கு ஏற்ப அதுவும் முதிர்ச்சி அடைகிறது, அதனுடன் மன செயல்பாடும் மாறுகிறது. மனச்சரிவு பொதுவானது, மேலும் இது முதுமையில் இயல்பாக ஏற்படும் விளைவுகளில் ஒன்றாகும். ஆனால் அறிவாற்றல் குறைபாடு தவிர்க்க முடியாதது அல்ல. சிலருக்கு சமீபத்திய நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் குறையும் ஆனால் பழைய நினைவுகள் மனதில் நிற்கும். உங்கள் நினைவாற்றலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும்...அதே சமயம் மூளையின் செல்கள் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உங்களுக்கான சில அட்வைஸ்கள் இதோ...




1. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
நமது மூளை தசைகளைப் பயன்படுத்துவதும் நம் மனதிற்கு உதவுகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. தவறாமல் உடற்பயிற்சி செய்யும் நபருக்கு அவரது மூளையின் உள் பகுதிக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை கொண்டு வரும் சிறிய இரத்த நாளங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. உடற்பயிற்சி புதிய நரம்பு செல்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் மூளை செல்களுக்கு இடையிலான தொடர்புகளை அதிகரிக்கிறது.


2. உங்கள் உணவை மேம்படுத்தவும்
நல்ல ஊட்டச்சத்து நம் மனதுக்கும் உடலுக்கும் உதவும். பழங்கள், காய்கறிகள், மீன், பருப்புகள், அன் சாச்சுரேட்டட் எண்ணெய்கள் (ஆலிவ் எண்ணெய் போன்றவை) மற்றும் புரதங்களின் தாவர ஆதாரங்களைக் கொண்டு சமைக்கப்படும் மத்திய கிழக்கு வகை கடல் பாணியிலான உணவை உண்பவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடு மற்றும் டிமென்ஷியாவை உருவாகும் வாய்ப்பு குறைவு.


3. உங்கள் தூக்கத்தில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்
அறிவாற்றல் செயல்பாட்டிற்கு போதுமான தூக்கம் பெறுவது முக்கியம். இது தளர்வு உணர்வை அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும். ஒரு இரவுக்கு 7-9 மணிநேர தூக்கத்தை இலக்காகக் கொள்ளுங்கள்.


4. உங்கள் மனதை உற்சாகமாக வைத்திருங்கள்


உங்களை சுதந்திரமாகவும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும் செயல்பாடுகளை அதிகம்  கருத்தில் கொள்ளுங்கள். புதிய கணினி திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.போர்ட் கேம்ஸ் விளையாடும் குழுக்களில்  புத்தகக் கிளப்பில் அல்லது நடனக் குழுவில் பங்கேற்க; அல்லது தோட்டக்கலை, கைவினைப்பொருட்கள் அல்லது சமையல் செய்யும் குழுக்களில் இணைந்து செயல்பட முயற்சிக்கவும்.


5. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்


புகையிலை பயன்பாடு நமது மூளை உட்பட அனைத்து உறுப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும். நீங்கள் பல ஆண்டுகளாக புகைபிடித்திருந்தாலும் உடனடியாக இப்போதே அதனை நிறுத்துவது கூட, எதிர்காலத்தில் ஆரோக்கியமான மூளைச் செயல்பாட்டிற்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.


6. மக்களுடன் மக்களாக இணையவும்..
வலுவான சமூக இணைப்புகளை பராமரிப்பது அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, ஏனெனில் இது கவனத்தையும் நினைவாற்றலையும் தூண்டுகிறது மற்றும் உங்கள் மூளை ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகிறது.