Paracetamol : பேரசிட்டமால் மாத்திரை பாதுகாப்பானதா? பேரசிட்டமால் பற்றிய பொய்களும், உண்மை செய்திகளும்..

பேரசிட்டமால் பாதுகாப்பானது என்றபோதும், அதனைக் குறித்த பொய்களைக் களைய வேண்டும். பேரசிட்டமால் பற்றி கூறப்படும் பொய்களும், அவற்றின் உண்மைத் தன்மையையும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.. 

Continues below advertisement

பேரசிட்டமால் மாத்திரைகள் ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கும் ஒன்றாக இருக்கிறது. அசிட்டாமினோஃபென், வலி நிவாரணி, காய்ச்சல் நீக்கி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்த மாத்திரை, காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி முதலான பிரச்னைகளின் போது மக்களுக்குப் பெரிதும் உதவுவதால் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. 

Continues below advertisement

நாடு முழுவதும் பல கோடி மக்கள் அன்றாடம் பேரசிட்டமால் மாத்திரையைப் பயன்படுத்தி வந்தாலும், பலருக்கும் அதன் சிகிச்சை முறை பற்றியோ, அது எப்படி வேலை செய்கிறது என்பது பற்றியோ மக்களுக்குத் தெரியவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா காலகட்டத்தில் மக்கள் பலரும் காய்ச்சல், தலைவலி, உடல் வலி முதலான அறிகுறிகளை சரிசெய்ய பேரசிட்டமால் உட்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

உல்க சுகாதார நிறுவனம் அதீத காய்ச்சல், மிதமான உடல் வலி, சளி, ஃப்ளூ காய்ச்சல் முதலானவற்றை சரிசெய்ய நோயாளிகளுக்குப் பேரசிட்டமால் பெரிதும் உதவுவதாகக் கூறி, பரிந்துரை செய்துள்ளது. மேலும், இந்தியாவில் பெரும்பாலானோர் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் முதலான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதால், வலி நிவாரணியாக பேரசிட்டமால் உண்பது பாதுகாப்பானது எனவும் கூறப்பட்டுள்ளது. 

பேரசிட்டமால் மாத்திரை பாதுகாப்பானது என்ற போதும், அதனைக் குறித்து பரப்பப்படும் பொய்களைக் களைய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பேரசிட்டமால் பற்றி கூறப்படும் பொய்களும், அவற்றின் உண்மைத் தன்மையையும் விளக்கி இங்கே பட்டியலிட்டுள்ளோம்.. 

1. பொய்: பேரசிட்டமால் மாத்திரை உடலில் சுமார் 24 மணிநேரம் வரை இருக்கும். 

உண்மை: பேரசிட்டமால் மாத்திரையின் தாக்கம் அது உண்ணப்பட்டு சுமார் 30 நிமிடங்களில் தொடங்கி விடுவதோடு, சுமார் 4 முதல் 6 மணிநேரம் வரை நமது உடலில் இருக்கிறது. 

2. பொய்: பேரசிட்டமால் மாத்திரை உண்பது நீண்ட கால பக்க விளைவுகளை ஏற்படுத்துவதோடு, உடல் நலனைப் பாதிப்படைய செய்கிறது. 

உண்மை: மிதமான வலியைச் சரி செய்வதற்கான முன்னணி மருந்துகளுள் ஒன்றாக பேரசிட்டமால் மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. பிற வலி நிவாரணிகளோடு ஒப்பிடுகையில் இதில் பக்க விளைவுகள் மிகக் குறைவு எனக் கூறப்படுகிறது. 

3. பொய்: நீரிழிவு நோய் கொண்டோரும், உயர் ரத்த அழுத்தம் கொண்டோரும் பேரசிட்டமால் மாத்திரை உண்ண முடியாது.

உண்மை: பாதிப்புகளை ஏற்படுத்தாத வலி நிவாரணியாக இருக்கும் ஒரே மாத்திரை பேரசிட்டமால் மட்டுமே எனவும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் முதலானவற்றால் பாதிக்கப்படுவோரும் இந்த மாத்திரையை உட்கொள்ளலாம். 

பேரசிட்டமால் மாத்திரைகளில் உள்ள ஆப்டிஸார்ப் தொழில்நுட்பத்தின் மூலமாக பேரசிட்டமால் மாத்திரை மிக விரைவில் சிறிய துகள்களாக நொறுங்குவதோடு, வலி நிவாரணத்தை உடனே தொடங்குகிறது. மேலும், இதன் பாதுகாப்பான அம்சங்களால் அனைவருக்கும் பொருந்தும் மாத்திரையாகவும் இது இருக்கிறது. எனினும், பாதுகாப்பான வாழ்க்கை முறைக்கு, இந்த மாத்திரையை மருத்துவர் பரிந்துரை அளிக்கும் போது மட்டுமே உட்கொள்வது சிறந்தது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola