தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யாக பரவலாக பயன்படுத்தப்பட்ட காலம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு பரந்து விரிந்துள்ளது. சமையலுக்கு, கேக் பேக் செய்வதற்கு, சருமத்தை பாதுகாப்பதற்கு, கூந்தல் பராமரிப்புக்கு என்று தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.


தேங்காய் எண்ணெய் பயன்பாடு சில தகவல்கள்:


தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க இதய கூட்டமைப்பின் படி, தேங்காய் எண்ணெயில் உள்ள 82 சதவீத கொழுப்பு மிகுதியான கொழுப்பாக கருதப்படுகிறது. இது வெண்ணெயில் உள்ள 63 சதவீதம், மாட்டுக் கொழுப்பில் உள்ள 50 சதவீதம் மற்றும் பன்றிக் கொழுப்பில் உள்ள 39 சதவீதம் ஆகியவற்றைவிட அதிகமாகும் என்று கூறப்படுகிறது.சிலர் தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு ஆரோக்கியமானது என்று சொல்கிறார்கள் ஆனால் அதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என அமெரிக்க இதய கூட்டமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


எக்ஸீமாவுக்கு மருந்து
எக்ஸீமா எனப்படும் வறண்ட சருமத்திற்கு மருந்தாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. இது Staphylococcus aureus என்ற பாக்டீரியா பரவலைத் தடுக்கிறது. அன்றாடம் தேங்காய் எண்ணெய்யை சருமத்திற்கு பயன்படுத்தினால் 95% Staphylococcus aureus பாக்டீரியா அழிந்துவிடுகிறது. இதற்குக் காரணம் தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம். அதனால் தான் தேங்காய் எண்ணெய் இயற்கை மாய்ஸ்சரைஸராகவும் உள்ளது.


முகப்பருக்களுக்கு மருந்து
முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு அருமருந்தாக இருக்கிறது. acne vulgaris எனப்படும் பாதிப்பை குணப்படுத்துகிறது. தேங்காய் எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பு குணங்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் என இரண்டையும் ஒருசேர கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாம் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளையும் கொண்டுள்ளது. தேங்காய் எண்ணெய் சருமத்தை யுவி கதிர்களில் இருந்து காப்பாற்றுகிறது. ஆனால் அதே வேளையில் இதில் சருமத்தின் நுண் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தும் காமெடோஜெனிக் பண்பும் இருக்கிறது. அதனால் சென்ஸிடிவ் சருமம் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தும் முன் சரும நோய் நிபுணர்களை அணுகுவது நல்லது.


இயற்கை மாய்ஸ்சரைஸர்
தேங்காய் எண்ணெய் இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. முடியின் வளர்ச்சிக்கும், வறண்ட முடியை சரி செய்வதற்கும், தலைக்கு ஈரப்பதத்தை கொடுக்கவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. கொசு மற்றும் பூச்சிக் கடிக்கு மருந்தாக தேங்காய் எண்ணெய் செயல்படுகிறது. நமது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும், முகப்பரு மற்றும் தோல் அரிப்பு பிரச்சனைகளை போக்கவும் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக தேங்காய் இருக்கிறது. ஆக்ஸிஜனேற்றிகள், ஒமேகா -3 மற்றும் -6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் E மற்றும் C ஆகியவை அடங்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற தாவர உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. 


வாய் நலனை அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தொண்டை புண் இருக்கும்போது நம்மில் பெரும்பாலோர் ஆயில் புல்லிங் செய்கிறோம். இருப்பினும், தொண்டை புண் இருப்பவர்கள் மட்டும் தான் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் அல்ல. ஆயில் புல்லிங் என்பது ஒரு பழங்கால முறையாகும். எண்ணெய் பயன்படுத்தி வாய் கொப்புளிப்பதால் உங்கள் தொண்டை மற்றும் வாய் பகுதி சுத்தமாகிறது. தினசரி ஆயில் புல்லிங் செய்வதால், சுவாசம், உணவுக்குழல் பகுதியில் தோன்றும் தொற்று குறையும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2017ல் Journal of Traditional and Complementary Medicine என்ற மருத்துவ இதழில் இது குறித்த அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.


பிறப்புறுப்பு ஆரோக்கியம் பேண தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் இயற்கையான லூப்ரிகன்ட்டாக இருப்பதால் அதை பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும்போது, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, இப்பகுதி உலர்வாக மாறி அசௌகரியமாக இருந்தால், சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் போன்றதைப் பயன்படுத்தலாம்.