தற்போதுள்ள பொருளாதார தேவை மிகுந்த வாழ்க்கை சூழலில் குடும்ப மருத்துவர்கள் என்ற ஒருவரை தாண்டி தனிப்பட்ட முறையில் தெரபிஸ்டுகள் எனப்படும் சிகிச்சையாளர்களை நாடிச் செல்லும் சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்
போதை மறுவாழ்விற்கான சிகிச்சையாளர்கள்,
கலைத் துறைகளுக்கான கற்றலின் போது தனிப்பட்ட சிகிச்சையாளர்கள்,
குழந்தைகளுக்கான சிகிச்சையாளர்கள்,உடலுக்கான சிகிச்சையாளர்கள்,
உளவியலுக்கான சிகிச்சையாளர்கள்,
யோகா சிகிச்சையாளர்கள்
செய்திக்கான சிகிச்சையாளர்கள்,
திருமணம் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சையாளர்கள்,
இசைக்கான சிகிச்சையாளர்கள்,
தொழிலுக்கான சிகிச்சையாளர்கள்,
சமூகப் பணியாளர்கள்,மனநல செவிலியர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தெரபிஸ்ட் எனப்படும் சிகிச்சையாளர்களாக இருக்கிறார்கள்
இதில் நமக்கு எந்தத் துறையை சார்ந்து தெரபிஸ்ட் எனப்படும் சிகிச்சையாளர்கள் தேவையாக இருக்கிறார்களோ அவர்களை தேர்வு செய்து அவர்களுடன் நாம் நம் பயணத்தை தொடர வேண்டும் இப்படி தெரபிஸ்ட்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை குறித்து விரிவாக காணலாம்.
இலக்குகளை தீர்மானியுங்கள் அதற்கான தெரப்பிஸ்டை தேர்ந்தெடுங்கள்:
மனநலம் சார்ந்த அல்லது பழக்கவழக்கத்திலிருந்து விடுபட அல்லது உடல் நலம் சார்ந்த அல்லது கலைத்துறை சார்ந்த,எந்த இடத்தை நோக்கி நீங்கள் முன்னேற விரும்புகிறீர்களோ,அதற்கான இலக்குகளை முதலில் தீர்மானியுங்கள்,அந்த இலக்குகளை நோக்கி பயணிக்க,எந்த சிகிச்சையாளர் சரியாக இருப்பார் என்பதை வரிசைப்படுத்துங்கள்.
அந்தத் துறையில் அதற்கு முன் அந்த சிகிச்சையாளர் செய்த வெற்றிகள் என்ன என்பதை பட்டியலிடுங்கள்.
சிகிச்சையாளரின் நம்பகத்தன்மை:
மனநலம்,கலை வளர்ச்சி,உணவு நெறிமுறைகள், தொழில் பயிற்சி போன்றவற்றிற்காக ஒரு சிகிச்சையாளரை நீங்கள் நியமிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் போது, நம்முடைய மனதிற்கு நெருக்கமான உணர்வுகள்,வாழ்க்கை ரகசியங்கள் போன்றவற்றை,அவர் எந்த அளவுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பார்,என்ற விஷயத்தையும்,நீங்கள் பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் சிகிச்சையாளரின் முந்தைய வெற்றி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் சிகிச்சையாளர் இதற்கு முன் செய்த வேலையின் வெற்றி சதவிகிதத்தை தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் சிகிச்சையாளர், நுட்பமான வேலையோடு கூடிய பணத்தில் கவனம் வைக்கிறாரா,அல்லது பணத்தில் மட்டுமே குறியாக இருக்கிறாரா,என்பதை தெரிந்து கொள்ளுங்கள்:
நீங்கள் தேர்ந்தெடுக்கும் சிகிச்சையாளர் வேலையில் நுட்பமாக செயல்பட்டு,அதற்கான பணத்தினை பெற விரும்புகிறாரா,அல்லது பணத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்படுகிறாரா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வேலையை விருப்பத்துடனும் ஈடுபாடுடனும் செய்யும் சிகிச்சையாளர் யார் என்பதை தெரிந்து கொண்டு அவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
தோல்வியை கண்டு துவள வேண்டாம்:
நீங்கள் சரியான சிகிச்சையாளரை தேர்வு செய்த பிறகு அவருடன் பயணத்தில் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் சிறு சிறு தோல்விகளை கண்டு துவண்டு விட வேண்டாம்.
நீங்களும் உங்கள் சிகிச்சையாளரும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்ற அளவில் அவருடன் தொடர்பில் இருக்கும் போது உங்களுக்கும் சிகிச்சையாளருக்கும் இடையேயான புரிதல் கொண்டு வருவதற்கு குறைந்தது 90 நாட்கள் ஆகும். ஆகவே இதற்கு பின்னர் வரும் நாட்களில், அவருடன் இணைந்து,உங்களுக்கு தேவையான சிகிச்சைகள்,அல்லது பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, இருவருக்கும் இடையேயான புரிதல் மூலமாக,நீங்கள் எந்த இலக்கை நோக்கி நகர்கிறீர்களோ,அதை நிச்சயம் எட்டி பிடிப்பீர்கள்.
மேல் சொன்ன விஷயங்களை கவனத்தில் கொண்டு,தனிப்பட்ட ஒரு சிகிச்சையாளரை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான துறையில் தேவையான இலக்கை சிறப்பாக சென்றடைய முடியும்