மிஸ் வேர்ல்ட் யார் என்று கேட்டால் ஒரு நொடி கூட யோசிக்காமல் "ஐஸ்வர்யா ராய்" என டக் என்று பதில் வரும். ஆம் அந்த அளவிற்கு 1994ம் ஆண்டு வாங்கிய பட்டம் அவரின் 49 வயதிலும் தொடர்கிறது. வேறு எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத ஒரு பெயர், புகழ், கௌரவம் அது. இன்றும் ரசிகர்கள் அவரை அதே இடத்தில் வைத்து பார்ப்பது தான் ஐஸ்வர்யா ராய்க்கு இருக்கும் சிறப்பு. எத்தனை வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் குறைவே இல்லை ஐஸ். இந்த 8வது உலக அதிசயத்திற்கு இன்று பிறந்தநாள். ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா ராய் !!!



அனைத்திலும் நளினம் : 


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருமகள், உலக அழகி, பாலிவுட் குயின் இப்படி பல பெருமைகளை கொண்டிருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் மிகவும் தன்னடக்கத்துடன் இருக்கும் இந்த தேவதை இப்போது நம் அனைவருக்கும் நந்தினியாகவே தோன்றுகிறார். அவர் நடிப்பில், நடையில், உடையில் என்ன ஒரு நளினம். திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகளை கடந்த பின்பும் இன்றும் இயக்குனர்கள் பலரும் அவரின் கால்ஷீட்டிற்காக படையெடுப்பது ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே. விமர்சனங்களுக்கு செவி சாய்க்க விரும்பாத ஐஸ்வர்யா ராய் இத்தனை ஆண்டுகளாக சோசியல் மீடியாவை தவிர்த்து வந்தார். சமீபத்தில் தான் அவற்றில் தலை காட்ட துவங்கியுள்ளார்.






சினிமா துறையில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றும் அதே அழகோடும், நடைபோடும் ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர். ஒரு நெகடிவ் கதாபாத்திரத்தையும் இத்தனை அழகாக செய்ய முடியும் என்பதை நந்தினி கதாபாத்திரம் மூலம் நிரூபித்தவர். இந்த அழகு சிலை ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை வெளிநாடுகளில் கொண்டாடுவதுதான் வழக்கம். இந்த ஆண்டு எங்கு நடக்க போகிறதோ பிறந்தநாள் கொண்டாட்டம்.