குழந்தை நன்றாக தூங்குவது நல்ல அறிகுறிதான், ஆனால் பல அலாரங்களுக்குப் பிறகும் குழந்தை எழுந்திருக்கத் தவறும் போது அது பிரச்சினைக்கான அறிகுறி. குழந்தை அப்படி எழாமல் இருக்கும்போது படுக்கையில் இருந்து வலுக்கட்டாயமாக எழுப்ப வேண்டும். பல குழந்தைகள் இரவில் நன்றாக தூங்க முடியாமல், சோம்பல் அடைந்து, பகல் நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.


இரவில் நன்றாக தூங்கும் குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றனர். பல குழந்தைகள் இரவில் உறங்காமல் இருக்கின்றார்கள், அது அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வையும் பாதிக்கிறது.


உங்கள் குழந்தை எழுந்திருக்கும்போது அசௌகரியமாக உணர்கிறதா? உங்கள் குழந்தைக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லையா அல்லது அவர்களின் அன்றாட வேலைகளை எளிதாக செய்ய முடியவில்லையா? அதற்கு முறையான தூக்கமின்மை தான் காரணம். பல குழந்தைகள் இரவில் தூக்கமின்றி தவிக்கின்றனர், அது அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வின் உடல்நலத்தையும் பாதிக்கிறது. சிறு குழந்தைகளின் தூக்கம் இன்றியமையாதது. நல்ல தூக்கம் கொண்ட ஒருவர் மூளை, உடல், உணர்ச்சிகள் மற்றும் நடத்தையில் மிகப்பெரிய வளர்ச்சியை அனுபவிக்கிறார். குழந்தை பருவத்திலும் இளமைப் பருவத்திலும் கிடைக்கும் முறையான உறக்கமே அவர்களின் வளர்ச்சிக்கு களம் அமைக்கிறது.



இரவில் நன்றாக தூங்குவது குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். இதனால், குழந்தைகள் முதல் பள்ளி வயது குழந்தைகள், இளைஞர்கள் வரை அந்தந்த வயதில் எத்தனை மணிநேர உறக்கம் அவசியம் என்பதை அறிய பெற்றோர்கள் ஆர்வமாக இருக்கலாம்.


புதிதாகப் பிறந்த குழந்தைகள் 14 மணிநேரம் உறங்க வேண்டும், 1 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 15 மணிநேரம் உறங்க வேண்டும், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 14 மணிநேரம் உறங்க வேண்டும், பள்ளி செல்ல துவங்கும் குழந்தைகள் 10 முதல் 13 மணிநேரம் தூங்க வேண்டும், 6-13 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு சுமார் 9 மணிநேர தூக்கம் தேவை.


உங்கள் குழந்தை இரவில் நன்றாக தூங்க உதவும் சில தந்திரங்கள் இங்கே:



  1. உங்கள் குழந்தையை தினமும் குறைந்தது 10 முதல் 11 மணிநேரம் தவறாமல் தூங்க அனுமதிக்கவும். உங்கள் பிள்ளைக்கு தாமதமாக தூங்கும் பழக்கம் இருந்தால், அரை மணி நேரத்திற்கு முன்பே படுக்கைக்குச் செல்லுங்கள், அவ்வாறு செய்வது உங்கள் குழந்தை சரியான நேரத்தில் எழுந்திருக்க உதவும், மேலும் அவர்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தவறவிடாமல் கவனிக்க உதவும்.






  1. அதே நேர அட்டவணையை தொடர முயற்சி செய்யுங்கள், உங்கள் குழந்தை நிம்மதியாக தூங்க முடியும், தூக்கத்தை சரியாக முடிக்க முடியும். குழந்தையை அமைதிப்படுத்தவும், உடனடியாக தூங்கச் செய்யவும் ஒரு நிலையான படுக்கை நேர வழக்கத்தை உருவாக்கவும்.


 



  1. தூங்குவதற்கு குறைந்தது 1 மணி நேரத்திற்கு முன்பே உங்கள் பிள்ளை மொபைல், கணினி போன்றவற்றிலிருந்து வெளியேற பழக்க வேண்டும். உங்கள் குழந்தையை மொபைலில் விளையாடவோ அல்லது தொலைக்காட்சியைப் பார்க்கவோ அனுமதிக்காதீர்கள், அது எளிதில் குழந்தையின் தூக்கத்தை பறிக்கும்.


 



  1. காஃபின் மற்றும் சர்க்கரை பானங்களை தவிர்க்கவும், குறிப்பாக நாளின் இரண்டாம் பாதியில் இது தூக்கத்தை தடுக்கும். உங்கள் பிள்ளை தூங்குவதற்கு முன் நிறைய தண்ணீர் குடிக்க விடாதீர்கள், ஏனெனில் அவர்களை அதிகம் சிறுநீர் கழிக்க தூண்டும், தூக்கம் கெடும்.


 



  1. குழந்தையின் அறையில் நல்ல வெளிச்சம் மற்றும் வெப்பநிலையை பராமரிக்கவும். குழந்தையின் கட்டில் படுக்கையை பொம்மைகள் மற்றும் கனமான போர்வைகளால் நிரப்ப வேண்டாம், அது குழந்தையை மூச்சுத் திணறடித்து அவர்களை சங்கடப்படுத்தும். உங்கள் குழந்தையின் முதுகு மற்றும் கழுத்தை ஆதரிக்கும் ஒரு நல்ல தலையணை மற்றும் மெத்தையை பயன்படுத்தவும். பொருந்தாத மெத்தை, தலையணை முதுகு மற்றும் கழுத்து வலிக்கு வழிவகுக்கும்.



உங்கள் குழந்தைக்கு சத்தமாக அல்லது கனமாக மூச்சு விடுவது, குறட்டை விடுவது மற்றும் சீரான இடைவெளியில் எழுந்திருப்பது போன்ற தூக்கப் பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் குழந்தை தொடர்ந்து போதுமான தூக்கம் பெறுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் அவர் ஆரோக்கியமாக இருக்க முடியும்.