உயர் ரத்த அழுத்தத்துக்கு பொதுவாக அறிகுறிகள் எதுவும் கிடையாது என்றாலும் அது உங்கள் செக்ஸ் வாழ்கையில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. உயர்ரத்த அழுத்தம் ஒட்டுமொத்தமாக உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் ஒருவித வெறுமையை ஏற்படுத்தக் கூடியது.
உயர்ரத்த அழுத்தத்தால் செக்ஸ் ரீதியாக என்னென்ன பாதிப்பு ஏற்படும்?
உயர் ரத்த அழுத்தம் ரத்த நாளங்களை தடிமனாக்கும் அதனால் ரத்த ஓட்டம் தடைபடும். அப்படித் தடைபடும் நிலையில் ஆணுறுப்பு ரத்தம் செல்லுவது தடைபடலாம். இதன்காரணமாக உச்சமடைதல் தடைபடும்.
இந்த குறைந்த ரத்த ஓட்டத்தால் கிளர்ச்சி அடைவதும் குறைந்து எரக்டைல் டிஸ்ஃபங்க்ஷன் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
உடலுறவில் ஒருமுறை இந்தப் பிரச்னை ஏற்பட்டால் கூட அது பதட்டத்தையும் பயத்தையும் அதிகரிக்கும். ஒருவேளை இது மீண்டும் ஏற்படுமோ என்கிற அச்சத்தில் உடலுறவையே சிலர் தவிர்ப்பது உண்டு. இதனால் உங்கள் செக்ஸ் பார்ட்னருடனான உறவும் பாதிக்கப்படும்.
உயர் ரத்த அழுத்தம் விந்தணு வெளியேற்றத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும் இதனால் உடலுறவு ரீதியான ஆர்வம் குறையும். ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகள் கூட இந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
உயர் ரத்த அழுத்தத்தால் பெண்ணுறுப்பிலும் ரத்த ஓட்டம் தடைபடும் இதனால் நைட்ரஸ் ஆக்ஸைட் அளவு குறைந்து தசைகளை இறுகச் செய்யும்.
இதனால் செக்ஸில் ஆர்வமின்மை, உச்சமடைதலில் சிக்கல், யோனியில் வறட்சி, போன்றவை ஏற்படும். இதுதவிர பெண்களில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் உடலுறவு ரீதியான பாதிப்பு மேலதிகம் ஆராயப்படவில்லை.
தீர்வுகள் என்ன?
மருத்துவர்களின் பரிந்துரையில் சரியான லூப்ரிகண்ட்களை பயன்படுத்துவது வறட்சி போன்ற பிரச்னைகளுக்கான தீர்வு. உடலுறவு ரீதியான இந்த சிக்கலில் உறவிலும் விரிசல் வரலாம். அதனால் உயர்ரத்த அழுத்தம் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் பாலின வேறுபாடு இல்லாமல் டாக்டர்களை கலந்தாலோசிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தத்துக்கு கொடுக்கப்படும் சில மருந்துகளும் செக்ஸில் ஆர்வைத்தைக் குறைத்து உடலுறவு ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மருத்துவ ஆலோசனை பெறுபவர்கள் தங்களது ரத்த அழுத்த மாத்திரையில் டையூரடிக்ஸ் பீட்டா ப்ளாக்கரஸ் ஆகியவற்றின் அளவு குறித்து மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. மாத்திரைகளில் இதன் அளவு நேரடியாக செக்ஸ் வாழ்வை பாதிக்கக் கூடியவை.
பெரும்பாலும் மருத்துவர் பரிந்துரையின் பெயரில் மாத்திரைகளைத் தவறாமல் உட்கொண்டு வருவதே இதற்கு நிரந்தரத் தீர்வு அளிக்கும். இதனால் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறையும். உயர்ரத்த அழுத்தம் இருக்கிறதா என்பதை ஒருமுறைக்குப் பலமுறை பரிசோதித்த பிறகு உங்களது மருத்துவ சிகிச்சைகளையும் செக்ஸ் தொடர்பான சிகிச்சைகளையும் தொடர்வது பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் உயர்ரத்த அழுத்தம் இல்லாமல் அதற்கான மருந்துகளை உட்கொள்வது செக்ஸ் வாழ்வில் நாட்பட்ட பாதிப்புகள் சிலவற்றை ஏற்படுத்தும்.