உடல் எடையை குறைப்பது கடினம் என்றாலும் குறிப்பாகத் தொப்பையை குறைப்பது எப்போதுமே முடியாத காரியமாகவே தோன்றுகிறது. உடலின் மற்ற பாகங்களில் எடை கூடுதலைக் குறைப்பது முடிந்தாலும் வயிற்றுக்கு எனச் சற்று கூடுதலாகவே மெனக்கெடல் தேவைப்படுகிறது.


உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வயிற்றுக் கொழுப்பு ஒரு காரணமாக இருக்கிறது. எனவே, வயிற்றில் உள்ள கொழுப்பை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டியது அவசியம். ஒரு நல்ல, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் உங்கள் வயிற்றின் பருமனைக் குறைக்கப் பல வகையில் உதவியாக இருக்கும். இதற்கு ஒரு நிபுணரிடமிருந்து சில பரிந்துரைகளைப் பெற்றோம். அவர் குறிப்பிடுவது,


தொப்பை கொழுப்பைக் குறைக்க 4 உணவுக் குறிப்புகள்: 


1. நிறைய நார்ச்சத்து சாப்பிடுங்கள்: 


நார்ச்சத்து உணவு சாப்பிட்ட திருப்தியை ஊக்குவிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது, இது உணவில் இருந்து கலோரிகளை மேலும் செயலாக்க வழிவகுக்கிறது. ஓட்ஸ் தவிடு, கோதுமை தவிடு மற்றும் ஜோவர் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


2. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்களைத் தவிர்க்கவும் 


சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ஹார்மோன் சமநிலையைத் தடுக்கும் மற்றும் எடையைக் குறைப்பதை கடினமாக்கும். உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை அகற்ற விரும்பினால், கேக், பீட்சா, வெள்ளை ரொட்டி மற்றும் வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, முழு தானியங்கள், ஓட்ஸ், பிரவுன் பிரட் போன்றவற்றில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்களைத் தேர்வு செய்யவும். 


3. கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கலாம் 


40 வயதுக்குப் பிறகு கார்போஹைட்ரேட்டுகளை எரிக்கும் நமது திறன் வயதுக்கு ஏற்ப குறைகிறது, குறிப்பாக ஆனால் ஊட்டச்சத்து நிபுணர் கட்டாயம் அதனைக் குறைக்க பரிந்துரைக்கிறார். அனைத்து வகையான கார்போஹைட்ரேட்டுகளின் நுகர்வு 40 வயதுக்கு மேல் 40 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும் என்கிறார் அவர். 


 4. சிறிய அளவிலான உணவை உண்ணுங்கள்


 குறைந்த அளவு உணவை சாப்பிடுவது கலோரி பற்றாக்குறையை உருவாக்குகிறது. இது கலோரிகளை எரிக்க உதவுகிறது, குறிப்பாக வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள கலோரிகளைக் குறைக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு பெரிய அளவில் மூன்று வேளை சாப்பிடுவதை விட ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் சிறிய அளவாக உணவைப் பிரித்துச் சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள்.


இதுபோன்ற சிறிய உணவுமுறை மாற்றங்களால், வயிறு பருமனைக் குறைத்து ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்புக்கு வழிவகை செய்யலாம்.  ஆனால் உங்கள் உணவில் ஏதேனும் கடுமையான மாற்றங்களைச் செய்வதற்கு முன், உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுக மறக்காதீர்கள்.