தூக்கம்


நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம் என்ற தலை  சாய்த்திருப்பீர்கள். ஆனால் தூக்கமே வந்திருக்காது. நமது அன்றாட வாழ்வில் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டு தான் இருக்கும்.  நம்முடைய சிந்தனைகள் காரணமாகவே தூக்கம் வராமல் இருக்கும். இன்னொரு காரணம் இரவில் சாப்பிட்ட உணவாகக் கூட இருக்கலாம். இரவு உணவு சரியில்லை என்றால் கூட  நிச்சயம் தூக்கத்தை கலைக்கக் கூடும். அதனால் என்ன செய்வது என்று பலரும் யோசனை செய்வீர்கள்.  மனதை ஒருமுகப்படுத்துவது என்பது புதுமுயற்சி. அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் அது ஒரு நோயாக இருக்குமோ என பலர் யோசனை செய்வீர்கள். 


ஆரோக்கியமான உடலுக்கு ஆழ்ந்த தூக்கம் என்பது அவசியமான ஒன்று. அப்போது தான் உடல் உறுப்புகள் அதற்குரிய வேலைகளை சரியாக செய்து உடலை சரியாக பராமரிக்கும். இல்லையேனில் எதிர்விளைவுகளை உண்டாக்கி நோய்களை ஏற்படுத்தும். இன்சோம்னியா என்கிற தூக்கமின்மை நோயாலும் பலர் அவதிப்படுகின்றனர். இதுமட்மின்றி தூக்கமின்மை பிரச்சனையால் பல நோய்கள் வர வாய்ப்பும் உள்ளது.


இதயத்திற்கு ஆபத்து


முறையான தூக்கம் இல்லாமல் இருந்தால் இதய பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் குறைந்தது 8 மணி நேரமாவது நன்றாக தூங்க வேண்டும். இல்லையெனில் இதய பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதுமட்டுமின்றி முறையாக தூங்கவில்லை என்றால் மனஅழுத்தம், புற்றுநோய்,  தலைவலி, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் அனைத்து வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  மேலும், தூக்கமின்மை பிரச்சனை மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.




தவிர்க்க வேண்டிய உணவுகள்


ஆழ்ந்த தூக்கம் இல்லையென்றால் அது நம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவாக கூட இருக்கலாம். அதனால் தூங்குவதற்கு முன்பு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதன்படி , காஃபி, மது, சிகரெட் இவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோன்று தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். இரவில் கட்டாயம் அளவான உணவுகளை உண்ண பழங்கிக் கொள்ளுங்கள். லாப்டாஃப், டிவி, செல்போன் போன்றவற்றை இரவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.




ஆழ்ந்த தூக்கத்திற்கான வழிகள்



  • நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு கலைப்பாக வீட்டுக்கு நாள்தோறும் வருவார்கள். அப்போது உடல் வலிக்கு சூடான நீரில் குளிப்பது நல்லது. தூங்குவதற்கு 2 மணி முன்பு சூடான நீரில் குளிப்பது, ஆழ்ந்த தூக்கத்தை தரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • உடல் வலியால் கூட தூக்கம் வராமல் இருக்கும். அதனால் இரவு தூங்க செல்வதற்கு முன் மசாஜ் செய்வது நல்லது. மசாஜ் செய்வதால் உடலும் மனதும் அமைதியை பெரும். குறிப்பாக இரவில் மசாஜ் செய்தால் உடல் சோர்வு நீங்கி தூக்கத்தை ஏற்படுத்தும்.  இதற்காக அழகு நிலையம் செல்ல வேண்டாம். நம் வீட்டில் இருக்கும் எண்ணெய்யை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  • மேலும் இருட்டு அறையில் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும். இருட்டு அறையில் தூங்குவது என்பது அவசியம். அப்போது நம் எதையும் சிந்திக்காமல் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.  இருளில் தூங்கும்போது அதிக எண்ணிக்கையில் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.