இந்திய சமையலறைகளில் தவிர்க்க முடியாத ஏலக்காய், காலை தேநீர் முதல், சூடான பிரியாணி வரை அப்படியே ஆளைத் தூக்கிச்சாப்பிட்டுவிடும் வாசத்தைக் கொடுக்கக் கூடியது. பேச்சுவழக்கில் இது எலைச்சி அல்லது ஏலக்காய் என்று அழைக்கப்படுகிறது, இது நாட்டில் பரவலாக காணப்படும் விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்று. கருப்பு விதைகள் கொண்ட இந்த சிறிய பச்சை நிற காய்களை சிறிது சிறிதாக சாப்பிட்டால், வாயில் புத்துணர்ச்சி 
.






ஆனால் அதன் நறுமணம் மற்றும் தனித்துவமான சுவையைத் தவிர, ஏலக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன.மசாலாப் பொருட்களின் ராணி என்றால் சும்மாவா என்ன?


1. ஏலக்காய் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கிறது
ஏலக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன, இது தொற்றுநோய்களுக்கு எதிராக போராடும். “காய்ச்சல் அல்லது காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படும்போது ஏலக்காய் டீயை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.ஏலக்காய் சளி ,இருமல் மற்றும் சில சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது"



2. செரிமானம்
வயிறு உப்புசம் மற்றும் குடல் வாய்வு போன்ற பிரச்சனைகளை ஏலக்காயை உட்கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம். ஏலக்காயின் நறுமணம் சுவை மற்றும் உணர்ச்சிக்கூறுகளை செயல்படுத்துகிறது, இதனால் செரிமானத்திற்கு உதவுகிறது. இது செரிமாணத்துக்கு தேவையான நொதிகள் சுரப்பதைத் தூண்டுகிறது.


3. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
ஏலக்காய் இரத்தத்தை மெலிக்கும் செயலின் மூலம் நுரையீரலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து சமநிலையில் பராமரிக்கிறது.


4. சிறந்த ஆயுட்காலம்
ஏலக்காய் உடலில் உள்ள நச்சுகளை நீக்கி உள்அமைப்பை சுத்தமாக வைத்திருக்கும். எனவே, ஏலக்காயை தொடர்ந்து தேநீர் அல்லது தண்ணீரில் சேர்த்து உட்கொள்வது நீண்ட ஆயுளுக்கு உதவுவதாக இருக்கும்.


5. சுவாசத்தின் புத்துணர்ச்சி
ஏலக்காய் ஒரு உடனடி மவுத் ப்ரெஷ்னராகச் செயல்படுகிறது. ஒன்றை மட்டும் மென்று சாப்பிடுவது அல்லது அதன் சாற்றை விழுங்குவது வாய் துர்நாற்றத்தைப் போக்கச் சிறந்த வழியாகும். வயிற்றுப்போக்கு ஏற்படும்போது இதைச் சாப்பிடுவதும் பயனுள்ளதாக இருக்கும் இதனால் வயிறு இலகுவாகும்.