மத்திய அரசு 14 வகையான எஃப்டிசி மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. அதில் உள்ள ரசாயனக் கலவைகள் உடல்நிலைக்கு பக்கவாட்டு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் தடை செய்துள்ளது.


இது தொடர்பான அறிவிக்கையில் எஃப்டிசி மருந்துகள் தெரப்டிக் பண்புகள் கொண்டிருந்தாலும் கூட அதன் பக்கவாட்டு விளைவுகள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதால் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொது நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வகை மருந்துகளை நாட்டில் உற்பத்தி செய்ய விற்பனை செய்ய விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


தடை செய்யப்பட்ட மருந்துகள் என்னென்ன?


நிமெஸுலைட் + பாரசிட்டமால் டிஸ்பர்ஸிபிள் மாத்திரைகள்
களோஃபோனிரமைன் மாலியேட் + ப்ரோம்ஹெக்ஸைன் + ப்ரோம்ஹெக்ஸைன் + டெக்ஸ்ட்ரோமெடோர்ஃபான் + அமோனியம் + ஃபீனைல்ஃப்ரைன் + க்ளோஃபீனிரமைன் + கைஃபெனஸ்டைன் அண்ட் சால்புடாமல் + ப்ரோம்ஹெக்ஸைன் மருந்துகள் தடை செய்யபப்ட்டுள்ளன.


நிபுணர் குழு பரிந்துரை:
எஃப்டிசி மருந்துகளை தடை செய்ய வேண்டும் என்று நிபுணர் குழு தான் பரிந்துரை செய்துள்ளது. ட்ரக்ஸ் அண்ட் காஸ்மடிக்ஸ் ஆக்ட் 1940ன் படி இந்த 14 வகையான எஃப்டிசி மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது.


எஃப்டிசி ட்ரக்ஸ் என்பது இரண்டு அல்லது அதற்கும் மேலான ஃபார்மாசிட்டிகல்ஸ் கூறுகள் இருக்கும்.
இதற்கு முன்னதாக கடந்த 2016ல் அரசாங்கம் 344 மருந்துகளை தடை செய்தது. அவை எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல் மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இப்போது தடை செய்யப்பட்ட 14 மருந்துகளும் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட 344 மருந்துகளில் இருந்த மூலக் கூறு காம்பினேஷன்களைக் கொண்டதே.