கிளாக்கோமா நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தாவிட்டால் நிரந்தரமாக பார்வையிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கிளாக்கோமா நோயானது, சமீபத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோயினால் நிரந்தரமாக கண்பார்வையை இழக்கு வாய்ப்புள்ளதால், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கிளாக்கோமா நோய் என்றால் என்ன, இதன் அறிகுறிகள் என்ன, சிகிச்சை என்ன என்பது குறித்து மருத்துவம் என்ன சொல்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
கிளாக்கோமா
கிளாக்கோமா என்பது கண்களில் ஏற்படக்கூடிய ஒரு வகை நோய். கண்களில் ஏற்படும் ஒரு வகை திரவம் நரம்புகளை பாதிக்கிறது. இதன் காரணமாக மூளைக்கும் - கண்களுக்கு இடையே உள்ள நரம்புகள் பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் கண் பார்வை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நோய் ஏற்பட்ட ஆரம்ப காலத்தில், அறிகுறி தெரியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
image credits@pixabay
இதன் நோயானது தீவிரமான பிறகு, அறிகுறிகள் திடீரென்று தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மங்கலான பார்வை
கண்கள் சிவப்பாகுதல்
கண்களில் கடுமையான வலி ஏற்படுதல்
வாந்தி ஏற்படுதல்
தலைவலி
பாதிப்புக்கான காரணம்:
அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறையின் பிராந்திய தலைவர் டாக்டர். ஸ்ரீனிவாச ராவ் தெரிவிக்கையில், இந்தியாவில் கண் அழுத்த நோயால் 1.2 கோடி நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 12 லட்சம் நபர்கள் பார்வையற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், 98.5% பேர் இந்த நோய் பாதிப்பு தங்களுக்கு இருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.
பாதிப்புக்கான காரணம் குறித்து, அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர். கே. சுகிபிரியா தெரிவிக்கையில், வயது வித்தியாசமின்றி கிளாக்கோமா நோயானது பாதிப்பை ஏற்படுத்தும். 40 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், மரபு ரீதியாக கண் பாதிப்பை கொண்டிருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் ஒளிவிலகல் குறைபாடுகள் உள்ளவர்கள், கண் சொட்டு மருந்து, மாத்திரைகள் மற்றும் சரும க்ரீம்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பக்கட்டத்தில் அறிகுறிகள் தென்படாது என்பதால், இதனை தடுக்க , ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் உடனடியாக சிகிச்சை பெறுவதே சிறந்த வழியாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலம் பாதிப்புகள் இருந்தால் ஆரம்ப கட்டத்திலே சரி செய்துகொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read: Vitamin Gummies Side Effects : வைட்டமின் கம்மிஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!