செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெரும்பாலான பார்ட்னர்கள் குறிப்பிடும் முதல் கம்ப்ளைண்ட் காண்டம் (ஆணுறை) உபயோகித்தால் செக்ஸ் வைத்துக் கொண்டது போன்ற உணர்வே இல்லை என்பதுதான். இதுமட்டுமல்ல காண்டம் குறித்து இப்படியான பல வதந்திகளும் தவறான புரிதல்களும் உண்டு. அதற்கான விளக்கமளிக்கிறார் பாலியல் நிபுணர்.
ஆணுறை பயனற்றதா?
நாங்கள் ஆணுறை உபயோகித்தோம். ஆனால் என்ன உபயோகித்தும் பயனில்லை, பீர்யட்ஸ் நாட்கள் தள்ளிப்போகிறது எனப் புலம்புபவர்கள் உண்டு. ஆனால் உண்மையில் காண்டம்கள் 98 சதவிகிதம் பேரில் கருவுறுவதையும் பால்வினை நோய்ப்பரவலைத் தடுப்பதிலும் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறது என்கிறது ப்ளாண்ட் பேரண்ட்ஹூட் என்னும் சர்வதேச லைஃப்ஸ்டைல் நாளிதழ். ஆனால் உபயோகிக்கத் தெரியாமல் பயன்படுத்துவதால் வெறுமனே 85 சதவிகிதம் பேரில்தான் சக்ஸஸ் ரேட் இருப்பதாகச் சொல்கிறது. அதனால் அடுத்தமுறை ஆணுறை பயன்படுத்துவதற்கு முன்பு யூட்யூபில் ‘அந்த’ மாதிரியான படங்களைப் பார்க்கும் அதே முக்கியத்துவத்தை ஆணுறையை எப்படிப் பயன்படுத்துவது போன்ற வீடியோக்களைப் பார்ப்பதற்கும் தரவும் என அறிவுறுத்துகிறார் நிபுணர்.
ஒன்றுக்கு இரண்டாகப் பயன்படுத்தலாமா?
செக்ஸ் வைத்துக்கொள்ளத் தயங்கும் சிலர் பாதுகாப்பு கருதி ஒருபடி மேலே போய் இரண்டு ஆணுறைகளை உபயோகிப்பது உண்டு.ஆனால் இரண்டு ஆணுறைகளை உபயோகிப்பது தவறு என்கிறார் நிபுணர். அப்படி உபயோகிப்பதால் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து உடையும் அபாயம் இருப்பதாகவும் அதனால் ஆணுறை போட்டுக்கொண்டதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என்கிறார் அவர்.
ஆணுறைக்கு பதிலா ‘இப்படி’ச் செய்யலாமா?
செக்ஸ் வைத்துக்கொள்பவர்களில் சிலர் ஆணுறை அணிந்துகொண்டால் செக்ஸ் வைத்துக்கொண்ட உணர்வே இருப்பதில்லை என்பதற்காக அதை அணிவதைத் தவிர்த்துவிட்டு உச்சமடையும் நேரத்தில் சட்டென பிறப்புறுப்பை வெளியே எடுத்துவிடுவது உண்டு. அதுதான் ’பெஸ்ட்’ வழி என நினைத்தால் தவறு என்கிறார் பாலியல் நிபுணர். 78 சதவிகிதம் வரையில்தான் இந்த முறையில் சக்ஸஸ் ரேட் இருப்பதாகக் கூறுகிறார். மேலும் ஆணுறை அணிந்தால் செக்ஸ் வைத்துக்கொண்ட உணர்வே இருக்காது என்பதும் தவறு ஏனென்றால் எங்கே கருவுற்றுவிடுவோமோ என்கிற பதட்டத்திலேயே உடலுறவு வைத்துக்கொள்வதை விட ஆணுறை அளிக்கும் பாதுகாப்பில் மனது ரிலாக்ஸாக இருக்கும் அதனால் செக்ஸும் பதட்டமில்லாமல் ரிலாக்ஸ்டாக இருக்கும் என்கிறார்.
காண்டம் ஆண்களுக்கு மட்டுமானதா?
பெண்களுக்கு பிறப்புறுப்பில் செருகும் காண்டம் தனியே இருக்கிறது.இது சுமார் 8 மணிநேரம் வரைச் செயல்படும் ஆற்றல் உடையது. இதனை வாய்வழியான உடலுறவின்போது (Oral sex) பயன்படுத்தப் பரிந்துரைப்பதில்லை என்றாலும் பிறப்புறுப்பு வழியான செக்ஸுக்கு (Penetrative sex) பார்ட்னர் ஒருவேளை ஆணுறைக்கு அலர்ஜியானவராக இருக்கும்பட்சத்தில் அணிவதற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.