Tips to keep BP in control: சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்டால் BP குறையும் 


பரபரப்பான வாழ்க்கைமுறையில் நாம் இருப்பதால் தவறான உணவு பழக்கம், மனஅழுத்தம் என பல காரணங்களால் முன்றில் ஒருத்தருக்கு இரத்த அழுத்தம் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். நிபுணர்களின் கூற்றின்படி இரத்த அழுத்தம் கூடினாலும் குறைத்தாலும் சிக்கல் தான் என்கிறார்கள். இரத்த அழுத்தும் சமநிலையில் இருக்க வேண்டும் அதற்கு சரியான உணவு முறை மிக மிக முக்கியம். பெரும்பாலான மக்கள் இதன் தீவிரத்தை பற்றி உணர்வதில்லை. உப்பு குறைத்து சாப்பிடுவது முக்கியம் என்றாலும் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு வேறு சில பராமரிப்புகளும் உள்ளன. 


தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள், பருப்புகள், குறைந்த கொழுப்பு நிறைந்த பால், கார்போஹைட்ரேட்டுகள் , பீன்ஸ் போன்றவை இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகின்றன. இதனோடு உடலுக்கு தேவையான பொட்டாசியம் மாற்றும் மெக்னீசியம் நிறைந்த உணவுகளையும் எடுத்து கொள்ள வேண்டும்.


இந்த உணவு பொருளை எடுத்து கொண்டால் உடனடியாக இரத்த அழுத்தம் குறைந்து விடும் என்று எந்த ஒரு மேஜிக் உணவும் இல்லை. அதற்கு பதிலாக இரத்த அழுத்தத்திற்கு ஏற்ற உணவு வகைகளை தேர்ந்துஎடுத்து உங்கள் உணவுமுறையை மாற்றினால் மட்டுமே இது சாத்தியம். மேலும் இந்த பிரச்சனை உள்ளவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் அதிக அளவிலான நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளதால் அவை இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு உதவும் என ஹெல்த்லைன் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. 


 





 


கொழுப்பு நிறைந்த மீன்களில் அதிக அளிவிலான நார்ச்சத்து உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். பூசணி விதைகளில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்ட எண்ணெய் உள்ளது. பருப்பு வகைகள் மாற்றும் பீன்ஸ் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அவை உடலுக்கு நன்மையளிக்கிறது. 


காஃபின் பொருட்களான காபி மாற்றும் சாக்லேட், டீ அதிகம் குடிப்பதை தவிர்க்கவேண்டும். தினமும் வெறும் வயிற்றில் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து குடித்து வந்தால் நல்ல பலன் உண்டு. கொழுப்புகள் நிறைந்த இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும். 


இதனோடு இரத்த அழுத்தத்தை குறைக்க சிறந்த வழி நடைப்பயிற்சி மற்றும் முறையான உடற்பயிற்சி. இதன் மூலம் உங்களின் பிஎம்ஐ அதிகரித்து இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும்.