தங்களது 30 வயதுக்குப் பிறகு குழந்தை பெற விரும்பும் தம்பதிகள் கருத்தடை முறைகளைக் கட்டுப்படுத்துவது தவிர வேறு பல முறைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முட்டைகளுடன் பிறப்பதால், ஒரு பெண்ணின் கருவுறுதல் வயதாகும்போது குறையும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.


சிக்கல்கள்:


மேலும் அவர்களுக்கு வயதாகும்போது, இந்த முட்டைகளின் அளவு மற்றும் தரம் இரண்டும் குறைகிறது, இருப்பினும், கருவுறுதல் பிரச்சனைகள் பொதுவாக பெண்களின் உடல்நலக் கவலையாகக் கருதப்பட்டாலும், குறைந்த விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கம் போன்ற ஆண்களுக்கான பிரச்னைகளும்  இதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


உடலியல் சிக்கல்கள் எதுவும் இல்லை என்றால், வாழ்க்கை முறை காரணிகளும் இதில் பாதிப்பை ஏற்படுத்தலாம் மற்றும் எடை பிரச்சனை அல்லது மது அருந்துதல் ஆகியவை இதில் அடங்கும். குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் எப்போது உடலுறவு கொள்ள வேண்டும் மற்றும் எவ்வளவு ஜங்க் உணவுகளைச் சாப்பிடலாம் என்பது வரைப் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும்...




ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்


பொதுவாக, நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது ஒரு சிறந்த யோசனையாகும், குறிப்பாக நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால். உங்கள் ஊட்டச்சத்தை மாற்றுவது உங்கள் உடலை குழந்தை பெறுவதற்குத் தயாராகும் ஒரு முக்கிய அங்கமாகும்.  


”உங்கள் உடலை கருத்தரிப்பதற்கு தயார்படுத்துவதற்கான சிறந்த வழி, ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகள், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் கொண்ட சத்தான உணவுகளை உட்கொள்ளப் பழக்க வேண்டும்" இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவசியம், ஏனெனில் கேரட் சாப்பிடுவது பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இரத்த சோகையைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் துத்தநாகம் போன்ற கூறுகள் விந்தணுக்களின் தரத்தை உயர்த்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது:


மன அழுத்தம் கருவுறுதலுக்கான உங்கள் வாய்ப்புகளை பாதிக்கிறது. மன அழுத்தம் பல நோய்களுக்கு காரணமாகிறது. உங்கள் ஹார்மோன்கள் மற்றும் மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் உங்கள் மூளையின் ஹைபோதாலமஸ் மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். இது உங்களுக்கு இயல்பை விட பிற்பகுதியில் முட்டை உற்பத்தியைத் தட்டுப்படுத்தலாம். யோகா அல்லது தியானம் போன்ற இயற்கையான மன அழுத்தத்தைக் குறைக்கும் உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களை கவலையடையச் செய்யும் சூழ்நிலைகளில் இருந்து உங்களால் இயன்றவரை விடுபட முடியும்.


மது அருந்துவதைத் தவிர்த்தல்


கருவுற்ற பெண்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதையும், மது அருந்துவதையும், அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கருத்தரிப்பதற்கு முன் இவற்றைத் தவிர்ப்பது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  பெண்கள் தங்கள் மது அருந்துவதை ஒரு நாளைக்கு இரண்டு க்ளாஸ்களுக்கு மேல் செல்லக்கூடாது எனப் பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள்.


ஏனெனில் அவ்வாறு செய்வது அவர்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை மாற்றும். அதிக அளவு டீ மற்றும் காபி குடிப்பவர் என்றால் உங்களுடைய கெஃபைன் நுகர்வைக் குறைப்பது கருத்தில் கொள்ள வேண்டியது. ஏனெனில் அதிக அளவு கெஃபைன் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைப்பதோடு தொடர்புடையது, இது முட்டை உற்பத்தியைத் தடைசெய்யும் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகளைக் குறைக்கும். இதுதவிர உடலுறவின்போது எந்த பொஸிஷனில் இருக்கிறீர்கள் என்பது முக்கியம். விந்தணு வெளியேறுதல் யோனிக்குள் நுழையும்போது அது அங்கே தங்குவதற்கு இது ஏதுவாக உதவும். 


அடிக்கடி உடலுறவில் ஈடுபடுங்கள்


ஆய்வுகளின்படி, குறைந்தது ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்ளும் தம்பதிகள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். "உடலுறவை ஒரு வேலையாக இல்லாமல் சுவாரஸ்யமாக ஆக்குங்கள். வழக்கமான ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிகளைக் கொண்ட பெண்களில் கூட இனப்பெருக்க காலம் மாறக்கூடும் என்பதால் இந்த நேரம் முக்கியமானது” என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.