திரிபுராவின் நொதிக்கவைக்கப்பட்ட மூங்கில் தண்டு சாறு 'மெலி-அமிலே' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது உடல் பருமனுக்கு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. இது, உடல் எடை மேலாண்மை மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக உள்ளது என்று 'ஃபுட் ஃப்ரண்டையர்ஸ்   ஆய்வு தெரிவித்திருக்கிறது.


நொதித்தல் முறை:


நொதித்தல் நுட்பங்கள் மனித நாகரிகத்தில் பழமையானவை. அவை பல தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து வருகின்றனர். இந்த முறையானது, முக்கியமாக உணவைப் பாதுகாக்கவும், ஊட்டச்சத்து தரத்தை அதிகரிக்கவும், சுவை மற்றும் வாசனையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழல், கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் சமுதாயத்தின் பாரம்பரிய அறிவு ஆகியவற்றைப் பொறுத்து, தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகள் வேறுபடுகின்றன.





 


Also Read: Video: ஆச்சர்யமளிக்கும் வீடியோ! ஐரோப்பிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய நம்ம ராக்கெட்.! 


உடல் பருமன் எதிர்ப்பு:


அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்  தன்னாட்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தைச்  சேர்ந்த பேராசிரியர் மொஜிபுர் ஆர்.கான் தலைமையிலான குழுவினர் வடகிழக்கு பிராந்தியத்தின் பல்வேறு வகையான நொதிக்கவைக்கப்பட்ட  மூங்கில் தளிர்களின் உடல் பருமன் எதிர்ப்பு விளைவுகளை ஆராய்ந்தனர்.


இன் விட்ரோ செல் கல்ச்சர் ஆய்வுகளின் அடிப்படையில், திரிபுராவின் நொதிக்கவைக்கப்பட்ட மூங்கில் தண்டு வகை, 'மெலி-அமிலே' என்று அழைக்கப்படுகிறது.இது செல்லுக்குள் இருக்கும் கொழுப்பு திரட்சியைக் குறைக்கும் என்பதை குழு கவனித்துள்ளது.


 சமீபத்தில்  'ஃபுட் ஃப்ரண்டையர்ஸ் ' இதழில் தெரிவிப்பட்டதாவது  ”  நொதிக்கவைக்கப்பட்ட மூங்கில் தண்டு சாறு வெள்ளை அடிபோசைட்டுகளில் ஆற்றல் செலவினங்களை அதிகரிப்பதன் மூலம் உடல் பருமன் எதிர்ப்புத் தன்மைகளை உறுதிசெய்கிறது என்று கூறுகிறது.