கொழுப்பு கல்லீரல் என்பது என்ன?


நம்முடைய கல்லீரலில் அதிகமாக கொழுப்பு படிதலை தான் கொழுப்பு கல்லீரல் என்கிறோம். இயல்பாகவே கல்லீரலில் கொழுப்பு தன்மை இருக்கும். அதன் அளவு அதிகரிக்கும் போது ஏற்படும் பிரச்சினை தான் இந்த கொழுப்பு கல்லீரல் பிரச்சினை. நம்முடைய கல்லீரலின் எடையில் 5 சதவீதத்துக்கும் குறைவான அளவில் கொழுப்பு இருப்பது இயல்பு. ஆனால் 5-10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் போது இது கொழுப்பு கல்லீரலாக மாறுகிறது.




​கொழுப்பு கல்லீரல் யாருக்கெல்லாம் வரும்?


பொதுவாக கொழுப்பு கல்லீரல் பிரச்சினை இரண்டு விதங்களில் உண்டாகின்றது.


1. மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு வரும் கொழுப்பு கல்லீரல்.


2. மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கு வரும் கொழுப்பு கல்லீரல்


மதுப்பழக்கம் உள்ள பெரும்பாலானவர்களுக்கு இந்த alcoholic fatty liver என்னும் கொழுப்பு கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. ஆனால் பெண்களுக்கும் இந்த கொழுப்பு கல்லீரல் பிரச்சினை ஏற்படுவதுண்டு. அது பெரும்பாலும் non alcoholic fatty liver என்று சொல்லப்படுகிறது. இதற்கு மிக முக்கியக் காரணமே நம்முடைய ரத்தத்தில் உள்ள எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பது தான்.




​கொழுப்பு கல்லீரல் நோயின் நிலைகள் (stages of fatty liver disease)


கொழுப்பு கல்லீரல் பிரச்சினையை பொதுவாக நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம்.


1. ஆரம்ப நிலை - ஆரம்ப நிலையில் உள்ள கொழுப்பு கல்லீரல் பிரச்சினை என்பது நம்முடைய ரத்தத்தில் உள்ள கொழுப்புகள் சிறு சிறு படிவங்களாக திரண்டு சிறிய கொப்புளங்கள் போல நம்முடைய கல்லீரலில் ஆங்காங்கே ஒட்டிக் கொள்ளும். இந்த நிலையில் எந்த அறிகுறிகளும் பெரிதாக இருக்காது.


2. இரண்டாம் நிலை - தொடர்ச்சியாக கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும்போது ஏற்கனவே படிந்திருக்கும் கொழுப்புப் படிவங்கள் சிறு சிறு கட்டிகளாக (cyst) உருவாகிவிடும்


3. மூன்றாம் நிலை - கல்லீரலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் சிறு சிறு கொழுப்பு கட்டிகள் ஒன்றாகச் சேர்ந்து கல்லீரலில் வடுக்கள் (scar) போல உருவாகும். இதுபோன்ற வடுக்கள் கல்லீரலில் ஆங்காங்கே உருவாகுபவை தான் நார்த்திசு கட்டிகளாக மாறுகின்றன. இந்த நார்த்திசு கட்டிகள் தான் (fibrosis of liver) என்று சொல்லப்படுகிறது.


4. நான்காம் நிலை - இந்த நான்காம் நிலையில் கல்லீரலில் படிந்திருக்கும் நார்த்திசு கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்க ஆரம்பிக்கும். இது கல்லீரலையும் சுருக்க ஆரம்பித்து விடும். இதை தான் (cirisis ofliver) என்று சொல்லப்படுகிறது. அதன் செயல்திறன்களை மோசமாக பாதிக்க ஆரம்பித்து விடும். பிறகு அந்த நார்த்திசுக்கள் அழுக ஆரம்பிக்கும்.


இந்த நான்கு நிலைகளை கடந்தவுடன் கல்லீரல் செயலிழந்து போய்விடும்.




​கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள்


கொழுப்பு கல்லீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆரம்ப நிலையில் எந்தவித அறிகுறிகளும் தெரிவதில்லை. மேற்கண்ட நிலைகளில் முதல் இரண்டு நிலைகளில் பொிதாக கல்லீரல் கொழுப்பு நோய்க்கான அறிகுறிகள் தோன்றுவதில்லை. அதன் அடுத்த நிலைக்குச் செல்லும்போது சில அறிகுறிகள் தோன்றும்.



  • கல்லீரல் வீக்கம்,

  • அடிவயிற்று பகுதியில் வீக்கம்,

  • குமட்டல் மற்றும் வாந்தி,

  • அஜீரணக் கோளாறு,

  • பசியின்மை,

  • அதிக உடல் சோர்வு,

  • திடீர் எடை இழப்பு,


போன்ற அறிகுறிகள் உண்டாகும்.