நம்முடைய உடலின் தலை முடி முதல் கால் நகம் வரை உள்ளும், புறமும் உள்ள உறுப்புகள் அனைத்தின் ஆரோக்கியமும் மிக முக்கியமானவை. இவற்றில் ஏதேனும் ஒன்றில் பிரச்னை என்றாலும் கூட ஒட்டுமொத்த உடலும் ஒரு கணம் ஸ்தம்பித்து விடும். அப்படியான நிலையில் உடலின் ஒரு முக்கியமான பகுதியாக வயிறு உள்ளது. வயிறு நல்ல நிலையில் இருந்தால் நம்மை அண்டும் நோய்கள் அனைத்து உடனடியாக காணாமல் போகும் என்பது நம்பிக்கையாகும். இன்றைய வாழ்க்கை முறையில் நாம் எடுத்துக் கொள்ளும் தண்ணீர், உணவுகள் என பல விஷயங்களும் பசியின்மை, வாயு, அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் வயிற்றில் கனமான உணர்வு போன்ற பிரச்சினைகளை சர்வ சாதாரணமாக ஏற்படுத்தி விடுகின்றனர். 

Continues below advertisement

இதற்கு இயற்கை வைத்தியம் இருந்தாலும் மருந்து, மாத்திரைகளுடன் எந்த நேரமும் இருக்கிறார்கள். ஆனால் இவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க, ஒரு விஷயத்தைப் பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனைப் பற்றி நாம் காணலாம். 

ஒருவேளை நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் விரதம் இருப்பது சிறந்த வழியாகும். உங்களை பசியுடன் வைத்திருக்க விரதம் வழிவகை செய்யும் நிலையில்  இதனை தண்டனையாக கருதாமல் மருந்தாக எடுக்க வேண்டும். வயிறு தொடர்பான நோய்களை மருந்துகளால் ஓரளவுக்கு மட்டுமே சரி செய்ய முடியும். இதனால் தான் விரதம் இருப்பது சிறந்தது என சொல்லப்படுகிறது. 

Continues below advertisement

இது உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது. இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.  உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்ள ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது. ஒருவேளை தொடர் செரிமான பிரச்னை இருந்தால் 15 நாட்களுக்கு ஒருமுறை ஒருநாள் விரதம் இருக்கலாம். மாதத்திற்கு இரண்டு முறை வரும் ஏதேனும் ஒரு திதியை கணக்கிட்டு விரதம் இருக்கலாம். அன்றைய நாளில் உடலுக்கு ஆற்றலை அளிக்க போதுமான பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். 

வயிற்றை நிரப்ப பழங்களை அதிகமாக எடுக்க வேண்டாம். தேன் கலந்த தண்ணீர், தேங்காய் தண்ணீர் மற்றும் முடிந்தவரை வெற்று நீர் ஆகியவையும் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் விரதம் இருக்கும்போது ஏற்படும் சோர்வுகளை போக்குகிறது. முடிந்தவர்கள் வாரத்திற்கு ஒருமுறை அதனை மேற்கொள்ளலாம். 

விரதம் உங்களை பலவீனமாக உணர வைக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் இது மாயை என சொல்லப்படுகிறது. காரணம் நம்முடைய உடல் உணவில் இருந்து 30-40 சதவீத சக்தியை மட்டுமே பெறுகிறது. மீதமுள்ள ஆற்றல் நீர், காற்று மற்றும் ஓய்வு மூலம் பெறப்படுகிறது. அதனால் உண்ணாமல் இருப்பது மட்டுமே நம்முடைய உடல் பலவீனமடைய காரணம் இல்லை. விரதம் உடலில் இருந்து கெட்ட செல்களை அகற்றி புதிய, ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உடல்நல பாதிப்பு இருப்பவர்கள் விரதம் இருக்கும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். விரதம் இருப்பதால்  கிட்டத்தட்ட அனைத்து செரிமானப் பிரச்சினைகளும் இயற்கையாகவே குறையத் தொடங்கும். உங்களை அறியாமலேயே நீங்கள் சுறுசுறுப்பாக மாறுவீர்கள்.