வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் ரகசிய திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் குறித்து இருதரப்பு சார்பாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் ரசிகர்கள் தனுஷ் மிருணாள் தாகூரை கணவன் மனைவியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். 

Continues below advertisement

நடிகர் தனுஷ் தனது முதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தார். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். இவர்களின் இரு மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா தனுஷூடன் சில காலமும் ஐஸ்வர்யாவுடன் சில காலமும் நேரம் செலவிட்டு வருகிறார்கள். விவாகரத்து பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் தனுஷ் நடிகை மிருணாள் தாகூரை காதலித்து வருவதாக பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. 

தனுஷ் மிருணாள் தாகூர் திருமணம் நிஜமா ?

மிருணாள் தாகூர் நடித்த படத்தின் ப்ரோமோஷனுக்கு செல்வது , சமூக வலைதள பதிவுகளில் உரையாடிக் கொள்வது என இருவரது செயல்களும் இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக அமைந்தன. தற்போது இருவரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த தகவல் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடையே மிகப்பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. தனுஷ் ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தையே அளித்துள்ளது 

Continues below advertisement

தனுஷ் மிருணாள் தாகூர் ஃபோட்டோ வைரல் 

இந்த வதந்திகளுக்கு இடையே தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் சந்தித்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படமும் உண்மையா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பது உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

மிருணாள் தாகூரை அண்ணியாக்கிய ரசிகர்கள்

தனுஷ் மிருணாள் தாகூர் இருவரது தரப்பிலும் இந்த திருமண தகவல் குறித்த எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மிருணாள் தாகூரை தங்கது அண்ணியாக பாவிக்கத் தொடங்கியுள்ளார்கள். அண்மையில் நடிகை சமந்தா ராஜ் நிடிமொருவை திடீரென்று இரண்டாம் திருமணம் செய்துகொண்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் தனுஷின் இரண்டாம் திருமணம் குறித்த பேச்சும் சமூக வலைதளத்தில் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது.