நரம்பு மண்டலம் :
நமது நரம்பு மண்டலங்கள் நமது உடலின் மிக முக்கியமான பகுதிகள். அவை மிகுந்த சென்சிட்டிவானவையும் கூட. மூளைக்கு சிக்னல்களை அனுப்பி உடலின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதுதான் நரம்பு மண்டலங்களின் வேலை. அந்த நரம்பு மண்டலத்தில் ஏதேனும் ஒரு நரம்பு சேதமடைந்தால், அது நம் உடலில் மிகப்பெரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் பிற அசாதாரண உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
நியூரோபதி:
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகள் சேதமடைந்தால் அல்லது செயலிழந்தால் அதனை மருத்துவர்கள் நியூரோபதி என அழைக்கின்றனர். இது தசை பலவீனத்திற்கு வழிவகுக்கலாம் மற்றும் கடுமையான நோய்களுக்கு கூட வழிவகுக்கலாம். உங்களுக்கும் கூச்ச உணர்வு அல்லது ஊசி ஊசி போன்ற உணர்வுகள் இருந்தால், அது நரம்பியல் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
நரம்புகள் வகைகள் :
உணர்வு நரம்புகள்,தன்னியக்க நரம்புகள், மோட்டார் நரம்புகள் என வகைப்படுத்துக்கின்றன. இந்த நரம்புகள் ஒவ்வொன்றும் நமது உடலின் செயல்பாட்டின் வேலைகளை பிரித்து செய்கின்றனர்.
நரம்பியல் நோய்களுக்கான அறிகுறிகள் என்ன ?
- அடிக்கடி உணர்வின்மை ஏற்படுதல் .
- தசை பலவீனம்
- பக்கவாதம்
- அதிகப்படியான வியர்வை
- நீங்கள் ஆடையின்றி இருந்தாலும் கூட தோலில் கூடுதல் உறை இருப்பது போன்ற உணர்வு
- கால்கள் அல்லது கைகளில் கூச்சம் அல்லது கூச்ச உணர்வு அதிகரித்தல்
- கூர்மையான வலி, அல்லது எரியும் உணர்வு ஏற்படுதல்.
- தோலில் அதிக உணர்திறன்
- கால்கள் மற்றும் கைகளில் அசாதாரண வலி
மேற்கண்ட அறிகுகறிகளில் ஏதேனும் ஒன்று அதிகமாக இருக்கும் பொழுதோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட லேசான அறிகுறிகள் இருக்கும் பொழுதோ நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்