தைராய்டுக்கும் கண் வறட்சிக்கும் என்ன தொடர்பு? தீர்வு என்ன?

நீங்கள் எப்போதாவது வறண்ட கண்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அது எவ்வளவு சங்கடமான அல்லது வெளிப்படையான வலியை ஏற்படுத்தும் என்பதை அனைவருமே அறிவோம்.

Continues below advertisement

வறண்ட கண்கள் ஹைப்பர் தைராய்டிசத்தின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். வறண்ட நிலையால் கண்களில் எரிச்சல் அரிப்பு ஏற்படும். நீங்கள் எப்போதாவது வறண்ட கண்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அது எவ்வளவு சங்கடமான அல்லது வெளிப்படையான வலியை ஏற்படுத்தும் என்பதை அனைவருமே அறிவோம். சிலருக்கு, க்ரேவ்ஸ் நோய்க்கான சிகிச்சையின் பின்னர் ஹைப்போ தைராய்டிசம் உருவாகினால், க்ரேவ்ஸ் ஆப்தல்மோபதி எனப்படும் கண் பிரச்சனை உருவாகலாம். இந்த க்ரேவ்ஸ் நோய்  அதிகப்படியான தைராய்டின் அறிகுறியாகும். கிரேவ்ஸ் ஆப்தல்மோபதியில் கண் அசௌகரியம், நீண்ட கண் இமைகள் மற்றும் பார்வையில் மாற்றங்கள் ஏற்படும்.

Continues below advertisement

 

ஹைப்பர் தைராய்டிசம் கண்களை எவ்வாறு பாதிக்கிறது?

ஹைப்பர் தைராய்டிசத்தால் இந்த கிரேவ்ஸ் நோய் உலர் கண்கள் போலவே தோன்றலாம் என்றாலும் இது, சில நேரங்களில் இது முற்றிலும் வேறுபட்டது. உலர் கண் நோய்க்குறியால், உங்கள் கண்கள் போதுமான கண்ணீரை உற்பத்தி செய்யாது. இதன் விளைவாக உண்மையில் உலர்ந்த கண்கள் ஏற்படும். இருப்பினும், ஹைப்பர் தைராய்டிசத்துடன், உங்கள் கண்கள் சாதாரணமாக கண்ணீரை உருவாக்கலாம் மேலும் சாதாரண நிலையை விடக் கூடுதலாகக் கண்ணீரை உருவாக்கலாம். 

ஹைப்பர் தைராய்டிசம், அதிகப்படியான தைராய்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்கள் தைராய்டு அதிக அளவு தைராய்டு ஹார்மோனை உருவாக்கி வெளியிடும் ஒரு நிலை. இந்த நிலை உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தலாம். ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகளில் விரைவான இதயத் துடிப்பு, எடை இழப்பு, அதிகரித்த பசி மற்றும் பதட்டம் ஆகியவை அடங்கும். ஹைப்பர் தைராய்டிசத்தை ஆன்டிதைராய்டு மருந்துகள், கதிரியக்க அயோடின், பீட்டா பிளாக்கர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். தைராய்டு உற்பத்தி செய்யும் முக்கிய ஹார்மோன்களில் ட்ரையோடோதைரோனைன் (டி3) மற்றும் தைராக்ஸின் (டி4) ஆகியவை அடங்கும்.

உங்களுக்கு தைராய்டு நோய் இருக்கும்போது கண் வறட்சிக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

1. ஓவர்-தி-கவுண்டர் கண் மருந்துகள்: உங்கள் உலர் கண்ணை நிர்வகிக்க உதவும் செயற்கை கண்ணீர் அல்லது கண்களுக்கான ரெஃப்ரெஷ் டியர்ஸ் போன்ற மருந்துகளை நீங்கள் பயன்படுத்தலாம். இருப்பினும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படாத சில குறிக்கப்பட்ட தயாரிப்புகளைத் தவிர்ப்பது சிறந்தது, ஏனெனில் அவை வறண்ட கண்களை இன்னும் மோசமாக்கும்.

2. பரிந்துரைக்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகள்: கண் மருத்துவர் போன்ற ஒரு மருத்துவ நிபுணர், உங்கள் கண்களை ஈரமாக வைத்திருக்க உதவும் வலுவான ஸ்டீராய்டு கண் சொட்டுகளை பரிந்துரைக்கலாம். இந்த சொட்டு மருந்துகள் எந்த வீக்கம் அல்லது எரிச்சலையும் குறைக்கலாம். இருப்பினும், ஸ்டீராய்டு கண் மருந்துகள் பொதுவாக குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்த பாதுகாப்பானவை.

3. பரிந்துரைக்கப்பட்ட வாய்வழி ஸ்டீராய்டுகள்: வாய்வழி ஸ்டீராய்டு மருந்துகள் சில நேரங்களில் வறண்ட கண் மற்றும் பிற கண் பாதிப்பு அறிகுறிகளைப் போக்க உதவும். உங்கள் தைராய்டு நிலைக்கு சிகிச்சையளிக்கும் உட்சுரப்பியல் நிபுணரால் அவை பரிந்துரைக்கப்படலாம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola