நீரிழிவு நோய் அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு சவாலான விஷயமாக உள்ளது.  இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு  பல வித பக்க நோய்களை ஏற்படுகிறது. மற்றும் நீண்ட காலத்திற்கு உடலின் முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது.  கண்புரை, நரம்பு வாதம் மற்றும் க்ளுகோமா போன்ற நோயாளிகளைப் பாதிக்கும் சில பொதுவான கண் நோய்களின் வாய்ப்புகளையும் நீரிழிவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோய் , கண் வறட்சி நோய்க்குறியின் அபாயத்தையும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

நிபுணர்களின் கூற்றுப்படி, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளிடையே இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது என தெரியவந்துள்ளது. கண் வறட்சி நோய்க்குறி என்பது கண்களுக்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காத போது ஏற்படும் என கூறப்படுகிறது. இது ஒரு கவலைக்குரிய விஷயம் என கூறியுள்ள மருத்துவர்கள், கண்ணில் ஈரத் தன்மை குறையும்போது அதில் பாக்டீரியா தாக்குதல் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தான சில அறிகுறிகள் உள்ளன.  நீரிழிவு நோயாளிகள் பின்வரும் அறிகுறிகளை கண்களில் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்களில் எரியும் உணர்வு, ஒட்டுதல் மற்றும் நீர்வடிதல் , கண் சிவத்தல் மற்றும் மங்கலான பார்வை, கண் கூசுதல் போன்றவை ஏற்படுகின்றன.

 


Dry Eye Syndrome : கண் வறண்டு போகுதா? எரிச்சல் இருக்கா? இந்த அறிகுறிகள் இதற்கானதா? எச்சரிக்கை..

 

நீரிழிவு நோய் அதிகமாகும் போது  மேலும் ஒரு சிவப்பு எச்சரிக்கை கண்களில் கண்ணீர் படலம் ஏற்படும் என குருகிராமில் உள்ள வியான் கண் மற்றும் விழித்திரை மையத்தின் டாக்டர் நீரஜ் சந்துஜா தெரிவித்துள்ளார். இது குறித்து ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் வேறு சில உடம்பியல் நோய்களும் கவனிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது‌.

 

மேலும் புற நரம்பியல் நோய்கள், உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகள், இன்சுலின் பற்றாக்குறை மற்றும் வீக்கம் ஆகும்.  பொதுவாக 10 வருடங்களுக்கும் மேலான நீரிழிவு நோயாளிகளுக்கு வறண்ட கண்கள் ஏற்படுவதான வலுவான சாத்தியக்கூறுகள் கொண்டுள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய நோய்க்குறிக்கு சிகிச்சையளிப்பதற்கு,  அழற்சி எதிர்ப்பு மருந்துகள்,  கண் சொட்டுகளை சுகாதார நிபுணர்களின்  வழிகாட்டுதலுடன் பெறுவது முக்கியம்.