New Omicron Sub-Lineage BA.2.75 : வேகமாக பரவுகிறதா ஓமிக்ரான் துணை வகை BA.2.75 ? அறிகுறிகள் என்ன?
சமீப காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஓமிக்ரான் துணை பரம்பரையின் ஒரு வகையான BA.2.75 வகை வைரஸ் பரவ தொடங்கியது.
வேகமாக பரவும் தன்மைகொண்டது :
முதன்முதலில் இந்தியாவில் தொடங்கிய BA.2.75 தற்போது லண்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவல் பதிவாகியுள்ளது. இது BA.2 பரம்பரையை சேர்ந்தது. கோவிட்-19 வைரஸின் மற்ற துணை வகைகளை காட்டிலும் BA.2.75 , 18 % மேம்பட்ட வளர்ச்சி உடையது மற்றும் வேகமாக பரவ கூடியது என்றும் தடுப்பூசிகளில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கலாம் என ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
BA.2.75 துணை வகைகளுக்கு கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா அல்லது மருத்துவ ரீதியாக மிகவும் தீவிர தன்மை கொண்டதை என்பதை கணிப்பதற்கு இன்னும் கொஞ்சம் தாமதமாகும் என தெளிவுபடுத்தியுள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன். இந்த BA.2.75 வகையின் டொமைனில் சில பிறழ்வுகளைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். அதனால் எளிதாக மனித ஏற்பியுடன் தன்னை இணைத்துக் கொள்ளமுடியும்.
BA.2.75 துணை வகையின் மறுப்பதில் அறிகுறிகள் என்ன :
ஓமிக்ரானின் புதிய துணை பரம்பரை பெரிய அலைகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை என பல மருத்துவ வல்லுநர்கள் கூறினாலும் வயதானவர்கள் கவனமாக இருந்து முக்கியம். ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுவது அவசியம்.
BA 2.75 துணை பரம்பரை இதுவரையில் எந்த ஒரு தனித்துவமான அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்லை. சிலருக்கு லேசான காய்ச்சல் இருக்கலாம் அல்லது நோய் தொற்று ஏற்பட்டும் அறிகுறியற்றவர்களாகவும் இருக்கலாம். இந்த துணை வகையினை RT-PCR சோதனை மூலம் கண்டறிவது மிகவும் கடினம். எனவே பெரிய மக்கள்தொகைக்கு பரிசோதிக்க ஏற்றவாறு வேறு பரிசோதனை முறையை ஏற்பாடு செய்வது அவசியம்.
மாஸ்க் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி அவசியம் :
புதிய துணை வகை நோய்த்தொற்று இது வரையில் முடிவு வரவில்லை என்பதால் அனைவரும் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. குறிப்பாக பொது போக்குவரத்தான பேருந்து, ரயில், விமானம் அல்லது நெரிசலான இடங்களுக்கு செல்லும் போதும் வீட்டைல் விட்டு வெளியே எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்வது அவசியம். கோவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸைப் பெறத் தகுதியுடையவர்கள் நிச்சம் அதை செலுத்தி கொண்டு பாதுகாப்பை பெற வேண்டும்.