விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ இதுவரை 44,556 பேர்‌ கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இவர்களில்‌ 43,857போ்‌ குணமடைந்தனர்‌. 347 போ்‌ உயிரிழந்தனர்‌. இந்த தினசரி பாதிப்பு பொதுமுடக்கம்‌ காரணமாக படிப்படியாகக்‌ குறையத்‌ தொடங்கியது. இந்த நிலையில் இன்று (22-08-2021) 34 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதே நிலை நீடித்தால்‌, விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ குறைந்து, பாதிப்பு வெகுவாகக்‌ குறைய வாய்ப்புள்ளது.  இந்த புள்ளி விவரங்கள்‌ விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌.



வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட விழுப்புரம் ‌மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌துறையினர்‌ தெரிவித்தனர்‌.


 




 


தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் விக்கிரவாண்டி, வானூர், செஞ்சி, திண்டிவனம் ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் விழுப்புரம், திண்டிவனத்தில் தலா ஒரு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 187 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மொத்தம் 831 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 277 ஆக்சிஜன் படுக்கைகள். இதில், 83 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. இந்த படுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் 24,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு ஆக்சிஜன் டேங்கர் உள்ளது. இதில், 18,000 முதல் 19,000 லிட்டர் மட்டுமே ஆக்சிஜன் நிரப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.


 


இரண்டாவது அலை ஓயவில்லை:  நாட்டில் கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை முற்றிலுமாக குறையவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நோய்த்தொற்று குறைந்துவரும் நிலையில், ஒரு சில இடங்களில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது என்று கூறினார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை இணைச் செயலர் தெரிவித்தார்.