தமிழகத்தில் இன்று 1630 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 931 ஆகும். பெண்கள் 699 நபர்கள் ஆவர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 855 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் இன்று 177 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி, தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 171 ஆகும். சென்னையில் இன்று தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 129 ஆகும். இன்றைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் கொரோனாவால் 15 லட்சத்து 18 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மட்டும் 10 லட்சத்து 81 ஆயிரத்து 941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.




மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,827 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 47 ஆயிரத்து 005 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 20 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 709 ஆக உயர்ந்துள்ளது.


தமிழ்நாட்டில் இன்று உயிரிழந்தவர்களில் 4 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள். 19 பேர் நீண்டகால நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தவர்கள். மாநிலத்தில் இன்று 40 ஆயிரத்து 763 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25 ஆயிரத்து 148 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 8 ஆயிரத்து 39 ஐ.சி.யு. படுக்கைகளும் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கின்றன.




தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மே மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், இன்று கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட தஞ்சை மற்றும் சேலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.