திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் , கரும்பூஞ்சை நோய்க்கான சிகிச்சை  குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், அதனைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு குறித்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால்பாபு மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்,ஆக்சிஜன் கையிருப்பு,வெண்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் இருப்பு தற்போதைய கொரேனா நோய் தாக்கத்தின் அளவு ஆகியவற்றினை கேட்டறிந்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும்,15 நபர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சென்னை, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் 7 நபர்களும், மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 நபர்களும், பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 1 நபரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கரும்பூஞ்சை தொற்று சிகிச்சைக்கான அனைத்து மருந்துகளும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது வரவழைக்கப்பட்டு கையிருப்பில் உள்ளதாகவும்,தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிலேயே கரும்புஞ்சை நோய்க்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இரண்டு நபர்கள் சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.


 




திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 32 பேருக்கு முதல் தவனை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 31,061 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் 913 ஆக்சிஜன் படுக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுப்பணித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 96 ஆயிரத்து 500 லிட்டர் ஆக்சிஜன் கையிருப்பில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது 3 லட்சத்து 56 ஆயிரத்து 400 லிட்டர் ஆக்சிஜன் தற்போது தமிழகத்தில் கையிருப்பில் உள்ளதாகவும்,தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 33 ஆயிரத்து 807 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை  உள்ளது எனவும், இந்நிலையில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்