நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிக பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. மேலும் இரண்டாவது அலை கொரோனா தொற்றால்  பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.  இதனால் தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழுஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றானது இரட்டைஇலகக்காக உயர்ந்து கொண்டே இருந்து தற்போது மாவட்டம் முழுவதும் அதிக பரிசோதனை நிலையம் துவங்கப்பட்டது.


அதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு கடுமையான முறையில் கடைபிடித்தால் கொரோனா தொற்று மாவட்டத்தில் படிப்படியாக குறைய தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக கொரோனா தொற்றால் பாதித்தவரின் எண்ணிக்கை ஒருநாளைக்கு 500 என்ற எண்ணிக்கையில் இருந்தது. ஆனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்த வாரத்தில் கொரோனா தொற்று 400 கீழ் குறைந்தே காணப்படுகிறது 



திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 298-ஆக உள்ளது. கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 பேர். தற்போது திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவரின் எண்ணிக்கை 6070. கொரோனாவால் இதுவரையில் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை 515-ஆக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை ஒருநாள்  தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இறப்பு சதவீதம் அதிகரித்து குறைந்து இருப்பது நோய்த் தொற்றின் வீரியத்தைக் காட்டுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், வந்தவாசி, ஆரணி, செய்யாறு போன்ற நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தற்போது  மாவட்டதில் உள்ள நகர்பகுதிகளில் தொற்று குறைந்த நிலையில் காணப்பட்டு கிராமப்புறங்களிலும்  குறைந்து கொண்டே வருகின்றது .




கிராமப்புறங்களில் உள்ள மக்கள் முகக்கவசம்  அணியாமலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் உள்ளதால் கொரோனா தொற்று பரவும் அபாயத்தை உணராமல் உள்ளனர். இதனால் தமிழக அரசாங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் சரியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கமுடியும். திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை, திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் மட்டும் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிரித்தும் நகர்ப்புறங்களில் கொரோனா  தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது 


கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் வகையில் தடுப்பூசிபோடும் திட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை ஒரேநாளில் 1801 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா தொற்று பாதித்த மாவட்டங்களுக்கு ஒரு சில தளர்வுகள் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு சில தளர்வுகளுடன் கூடியதாக உள்ளதால், திருவண்ணாமலையில் மாவட்டம் செங்கம், ஆரணி, வந்தவாசி, செய்யார், தண்டரம்பட்டு மற்றும் நகர்பகுதிகளில் மக்கள் வாகனங்களிலும்,கடைப்பகுதிகளிலும்  தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கூட்டமாக செல்வதாலும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.