உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் குறைந்து கொண்டு வருகிறது. மருத்துவர்கள் 3வது அலையும் பரவ வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 27 மாவட்டத்திற்கு பல்வேறு தளர்வுகளுடன் ஊடரங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கரூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுடன் தளர்வுகள் அறிவித்து அதன் நடைமுறையில் உள்ளது. தமிழக சுகாதாரத் துறையின் சார்பாக நாள்தோறும் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், தொடர்ந்து பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள எண்ணிக்கையும், அதேபோல் சிகிச்சை பலனின்றி உயிர் இறந்துள்ள எண்ணிக்கையும் வெளியிட்டு வருகின்றனர். 





இந்நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் அறிவிக்கப்பட்டிருந்த 101 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 116 நபர்கள் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாகவும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 01 ஆக உள்ளது. என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


தமிழக சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மொத்த விவரம் தற்போது காணலாம்: - தமிழகத்தில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21488 ஆகவும், அதில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவள் எண்ணிக்கை 20385 ஆகவும், தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 771 ஆகவும், கரூர் மாவட்டத்தில் 332 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும், தமிழக சுகாதாரத் துறை தற்போது அறிவிப்பை வெளியிட்டது.




கரூரில் இன்று தடுப்பூசி 20க்கும் மேற்பட்ட சிறப்பு தடுப்பூசி மையத்தில் 5000 தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனினும், கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான சீரிய முயற்சியால் 18 க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் மற்றும் 15 மேற்பட்ட கிராம பஞ்சாயத்து பொது மக்களிடையே காய்ச்சல் முகாமும் நடைபெற்று வருகிறது. இந்த காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் நேரில் சென்று தங்களது உடல் பரிசோதனையை செய்துகொண்டு அதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கரூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 5000 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு சென்ற இடம் வகையில் சிறப்பு முகாம் மூலம் போடப்பட்டு வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் காத்துக் கொண்டு இருக்கும் நிலையும் வந்துள்ளது.  ஆகவே, மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி முகாம் இன்னும் கூடுதலாக சிறப்பு மையத்தை ஏற்படுத்தி அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பூசி சென்றடையும், வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.