தமிழ்நாட்டில் 2,533 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றினால் உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிக பட்சமாக 1,059 ஆக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது . நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாவால் மக்களிடையே அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.