கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இன்று,1,484 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 1,461 ல் இருந்து இன்று 1,484 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேப்போல், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் குணமடைந்து 736 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட்டோர் எண்ணிக்கை 543லிருந்து 632 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்களிடையே இயல்பு வாழ்க்கை பாதிப்படையுமா என அச்சம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இருப்பினும் இன்று புதிதாக யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு, மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை, அலுவலகங்களில் உடல் வெப்பநிலையினை பரிசோதிப்பதும், சேனிடைசர் பயன்படுத்துவதும், பணியாளர்கள் மாஸ்க் அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளார்.
மாவட்ட வாரியான பாதிப்பு குறித்த தகவலில் சென்னையில் மட்டும் 632 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.