தமிழகத்தில் ஒரே நாளில் 2,765 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை தினசரி ஆயிரத்தை கடந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், போக்குவரத்து காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் பொதுமக்கள் மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் புதிதாக 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 38,028 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,378 ஆக உயர்ந்துள்ளது. 2,378 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. இந்த கொடிய தொற்றால் இன்று 1 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகப்பட்சமாக சென்னையில் 1011 பேருக்கு கொரோனா தொற்ரு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னையில் 7 வது நாளாக 1,000 ஐ கடந்து கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. செங்கல்பட்டில் 408 பேருக்கும், திருவள்ளூர் 184 பேருக்கும், கோவையில் 125 பேருக்கும், திருச்சியில் 93 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை கொரோனா நிலவரம் :
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்