உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்காக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சற்று கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிருந்தது. 


இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று 32 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மொத்தமாக 20,014 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இன்று தமிழ்நாட்டில் எந்தவித உயிரிழப்பும் பதிவாகவில்லை. 


இன்றைய கொரோனா நிலவரம்:


 






 


மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்: 


 






மருத்துவ படுக்கை விவரங்கள்:


 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண