தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து காணப்பட்டதால் தமிழக அரசு 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு என்று அறிவிக்கப்பட்டனர். தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து மாணவர்கள் மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 1,600 பள்ளிகள் உள்ளன. இதில் 545 பள்ளிகள் திறக்கப்பட்டன . இதில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 741 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு 50 சதவீத மாணவா்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்துள்ளது.
மேலும், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும்முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபி டிப்பது, வகுப்பறைகளில் மாணவர்கள் இடையே போதிய இடைவெளியு டன் அமர வைப்பது, மதிய உணவுநேரத்தில் கூட்டாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்ப்பது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் 42 வயது ஆசிரியரில் ஒருவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்து அதன் பிறகு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, பள்ளியில் பணிபுரியும் 20 ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் என 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் வெளிவந்த முடிவில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என வந்ததால் நிம்மதியடைந்தனர். அதில் பாதிக்கப்பட்ட ஆசிரியரின் குடும்பத்தினருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்றப்பட்டது.
இந்நிலையில், 2ம் கட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில், பிளஸ்- 1 மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கும், பள்ளி நூலகராக பணிபுரியும் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்ட றியப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்ட இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஒட்டு மொத்த துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 15 ஆசிரியர்கள், 120 மாணவர்களுக்கு சுகாதாரத்துறை குழுவினர் சளி, மாதிரி பரிசோதனை செய்தனர். இந்த முடிவுகள் வந்த பிறகுதான் பாதிப்புகள் குறித்து தெரியவரும். கொரோனா வால் பாதிக்கப்பட்ட 2 ஆசிரியர்கள் நூலகர்கள் 3 நபர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர், நூலகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.