திருவண்ணாமலையில் இன்று 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ குறைந்து வரும் கொரோனா தொற்று இன்று 43 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2 பேர் உயிரிழப்பு .

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் அது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.  இன்று புதிதாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 41 ஆக பதிவாகியதுடன், கொரோனாவால் இன்று 2 பேர் உயிர்ழப்பு , இதுவரையில் கொரோனா தொற்றால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 643 தொடர்கிறது.

Continues below advertisement

இதுவரை மாவட்டத்தில்  52 ஆயிரத்து 724 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 51 ஆயிரத்து 611 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் புதிதாக 41 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 48 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். 
மேலும், கொரோனா வைரஸ் தொற்றிக்காக மாவட்டத்தில் திருவண்ணாமலை , செங்கம் , ஆரணி , செய்யார் , வந்தவாசி , உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக படிபடியாக கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் 18வயதில் இருந்து 45வரையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருக்கிறது. தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 14747 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, 

திருவண்ணாமலையில் நாளை 36 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது தடுப்பூசி முகாம்கள் அமைத்துள்ள இடங்கள் முத்து விநாயகர் தெரு. சித்தா மருத்துவமனை, புதுதெரு முஸ்லிம் பள்ளி, டவுன் ஹால் நகராட்சி பள்ளி சின்னக்கடை தெரு, குழந்தைகள் நல மையம் நகராட்சி ஆரம்பப்பள்ளி பேகோபுரம், தியாகி அண்ணாமலையார் அரசு மேல்நிலைப்பள்ளி வன்னியன் குளத் தெரு, சண்முக அரசு மேல்நிலைப்பள்ளி செங்கம் ரோடு, நகராட்சி நடுநிலைப்பள்ளி தாமரை நகர், நகராட்சி தொடக்கப்பள்ளி காக்கா நகர், நீயும் முன் நர்சரி பள்ளி சூர்யா நகர் இடங்களில் பொதுமக்கள் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அரசு சார்பில் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக நடவடிக்கை மூலமாக நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் முழு மூச்சுடன் தற்காப்பை மேற்கொள்வதையும், முகக்கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும், சமூக விலகலையும் கடைபிடித்தால் மட்டுமே  கொரோனாவை ஒழிக்க முடியும்.

Continues below advertisement