கோவையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இந்த வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 13 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.


கோவையில் இன்று 236 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 32 ஆயிரத்து 351 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 781 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 5 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2212-ஆக அதிகரித்துள்ளது.


ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்


ஈரோட்டில் இன்று 177 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 6 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 146 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1745 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 95900 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 93513-ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 642-ஆக அதிகரித்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 22 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 65 பேர் குணமடைந்துள்ள நிலையில், 906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 88937 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 87148 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 883-ஆக அதிகரித்துள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 54 பேர் குணமடைந்துள்ள நிலையில், 485 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 31142-ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30471 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 186 ஆக உள்ளது.