திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 13 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32873-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 9 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 32094-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 638 இருக்கிறது. இந்நிலையில் 141 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தேனி , தென்காசி , தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரித்தோம். 




தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 9 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43469ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 6 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42854-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 519 இருக்கிறது. இந்நிலையில் 96 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் 3 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27298ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 5  நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26776-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தென்காசிமாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 484 இருக்கிறது. இந்நிலையில் 38 கொரோனா பாதிப்பால் தென்காசி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 14 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55952ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 14  நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 55370-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 405 இருக்கிறது. இந்நிலையில் 177 கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


அரசு நிலங்களை முறைகேடாக பட்டா போட்டு கொடுத்த தகவல்கள் கிழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


தேனியில் 90 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபரின் பெயரில் பட்டா கொடுத்த 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்