திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 4 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33272-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 2 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 32570-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்றுக்கு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 651 இருக்கிறது. இந்நிலையில் 51 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதே போல் தேனி , தென்காசி , நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விசாரித்தோம்.





தேனி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43614ஆக உயர்ந்துள்ளது.  இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 43084ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 521 இருக்கிறது. இந்நிலையில் 9 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




நெல்லை மாவட்டத்தில் இன்று மட்டும் 4 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49689-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 8  நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 49200-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 433 இருக்கிறது. இந்நிலையில் 56 கொரோனா பாதிப்பால் நெல்லை சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




தென்காசி மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று பரவல் இல்லை என்பது ஆறுதல். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27397-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து ஒருவர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26906-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தென்காசிமாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 486 இருக்கிறது. இந்நிலையில் 5 கொரோனா பாதிப்பால் தென்காசி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 3 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56528-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 4 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 56078-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 412 இருக்கிறது. இந்நிலையில் 38 கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண