தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,340 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 2,312 ஆக இருந்த தொற்று பாதிப்பு இன்று 2,340-ஆக உயர்ந்துள்ளது.
நேற்று தொற்று பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பினால் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி 2,599 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகபட்சமாக சென்னையில் 607-ஆக பதிவாகியுள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்,
தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,
சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,
தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம்,
இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,