தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 1538 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று 1551 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது. இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய பாதிப்பு மூலம் தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 10 ஆயிரத்து 299 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 15 லட்சத்து 25 ஆயிரத்து 149 ஆக உள்ளது. பெண்கள் மட்டும் 10 லட்சத்து 86 ஆயிரத்து 650 பேர் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று கொரோனா பாதிப்பு 182 ஆக பதிவாகியிருந்தது. இன்று சற்றே உயர்ந்து தலைநகர் சென்னையில் 189 ஆக உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 43 ஆயிரத்து 786 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைத் தவிர, கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பிற 36 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 1,349 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,873 ஆக பதிவாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,753 பேர் இன்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 59 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 18 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 397 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 3 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள்.
நாட்டில் கொரோனா மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும், தலைநகர் சென்னையில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னையின் பிரதான சுற்றுலா தளமான மெரினா கடற்கரையில் இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
குழந்தையை தாக்கிய கொடூர தாய்.. ஆந்திராவுக்கு தேடிச் சென்று கைது செய்த போலீசார்!