தமிழ்நாட்டில் இன்று 1578 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
1,51,855மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,578 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 188 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35627 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 17046 பேர் உள்ளனர். 12 வயதுக்குட்பட்ட 94 சிறார்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.