Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 1682 பேருக்கு கொரோனா தொற்று: 21 பேர் உயிரிழப்பு!

சென்னையில் இரண்டாம் நாளாக 200க்கும் கீழ் தொற்று எண்ணிக்கைப் பதிவாகியுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1661இல் இருந்து 1,647 ஆக குறைந்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 198 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 19  பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,379 ஆக உயர்ந்துள்ளது

Continues below advertisement

தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 50 ஆயிரத்து 370ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 48 ஆயிரத்து 289  நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 194 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 198 ஆக குறைந்துள்ளது.. கோயம்பத்தூரில் 235 பேரும், ஈரோட்டில் 130 பேரும், செங்கல்பட்டில் 110 பேரும், திருப்பூரில் 101 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை  35,400 ஆக உயர்ந்தது. அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்தனர்.  சென்னையில் இன்று மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் .சென்னையில் மட்டும் மொத்தம் 8454 பேர் உயிரிழந்துள்ளனர்.இது தவிர செங்கல்பட்டில் 3 பேர் தஞ்சாவூரில் 3 மற்றும் ஈரோட்டில் 2 பேர் இறந்துள்ளனர். 

12 வயதுக்கு உட்பட்ட 90 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களில் நாளுக்கு நாள் கொரொனா பாதிப்பு அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. மேலும் இணை நோய் இல்லாத ஒருவர் கொரோனாவால் உயிரிழிந்துள்ளனர்.50 வயதுக்கு உட்பட்ட 4 பேர் தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17,027 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,627 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,97,943 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று மாநிலம் முழுவதும் 40912 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25471 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் 8151 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement