தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1669இல் இருந்து 1,653 ஆக குறைந்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு நான்கு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இரண்டு நாட்களாகக் குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 204 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 22 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,310 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 43 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரத்து 478 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 204 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 196 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 204 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பத்தூரில் 201 பேரும், ஈரோட்டில் 139 பேரும், தஞ்சாவூரில் 91 பேரும், செங்கல்பட்டில் 101 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,310 ஆக உயர்ந்தது. அரசு மருத்துவமனைகளில் 19 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் ஏதும் இல்லாத 2 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 98,508 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. சென்னையில் மட்டும் மொத்தம் 8447 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,893 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,581 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,91,480 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று மாநிலம் முழுவதும் 40369 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25123 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் 8172 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.