கொரோனா தொற்றால் மேலும் 166 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,746 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 596 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,66,628 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 6,596 ஆக உள்ளது.
Delta Plus coronavirus: தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 43 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்து 34 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 396 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை 793, ஈரோடு 686, சேலம் 472, திருப்பூர் 419, தஞ்சாவூர் 338, செங்கல்பட்டு 277, நாமக்கல் 269, திருச்சி 247, திருவள்ளூர் 183, கடலூர் 168, திருவண்ணாமலை 173, கிருஷ்ணகிரி 152, நீலகிரி 125, கள்ளக்குறிச்சி 134, மதுரை 120, ராணிப்பேட்டை 103, கன்னியாகுமரி 122, நாகை 119, தருமபுரி 102, விழுப்புரம் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் 166 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,746 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 109 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 57 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். கோவை 25, வேலூர் 25, கடலூர், நாகை, சேலம் திருப்பூரில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 35 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 32 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 52,884 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10,432 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 23,58,785 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
12 வயதிற்குட்பட்ட 252 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் சென்னையில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும், ஆயிரத்துக்கு மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கெனவே மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளாவில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் இரண்டு பேருக்கு ல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.