Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் இன்று கொரோனாவுக்கு 55 பேர் பலி

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 14 Jul 2021 09:24 PM
தினசரி கொரோனா பாதிப்பு 2500க்கும் கீழ் குறைந்தது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 2 ஆயிரத்து 458 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,46,394 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 2,458 ஆக உள்ளது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து  26 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 35 ஆயிரத்து 588 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 153 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 153 ஆக உள்ளது.

கோவை 270, ஈரோடு 175, தஞ்சை 171, சேலம் 164, திருப்பூர் 146, செங்கல்பட்டு 131, கடலூர் 95, திருச்சி 94, திருவண்ணாமலை 74, நீலகிரி 68, நாமக்கல் 66, கள்ளக்குறிச்சி 65, திருவள்ளூர் 64, கன்னியாகுமரி 55, சிவகங்கை  45, விழுப்புரம் 44, கிருஷ்ணகிரி 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவால் மேலும் 55 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,557 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 39 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 16 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 20 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8272 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக கோவையில் 8 பேர், சென்னை மற்றும் தஞ்சாவூரில் தலா 5 பேர் உயிரிழந்துள்ளனர். 11 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு  பதிவாகவில்லை. 

மேற்கு வங்கத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும்

மேற்கு வங்கத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜூலை 30ஆம் தேதி வரை தொடரும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். திருமணத்தில் 50 பேர், இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்றும், மெட்ரோ ரயில்கள் வாரத்தில் 5 நாட்களுக்கு 50% பயணிகளுடன் இயக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் மீண்டும் ஊரடங்கு - எச்சரிக்கை 

கொரோனா இரண்டாவது அலை இன்னும் ஓயவில்லை. தேவைப்பட்டால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம் - மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எச்சரிக்கை 

மத்திய அரசிடம் 13 கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்

தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும், நீட் தேர்வு விலக்கு உள்பட 13 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கவுள்ளோம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.செங்கல்பட்டு, குன்னூரில் உள்ள தடுப்பூசி மையங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் கோரிக்கை விடுக்கப்படும் என்றும் கூறினார்.

இன்றுவரை சென்னையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 27.44 லட்சம் பேர் - சென்னை பெருநகராட்சி தகவல்

இன்றுவரை சென்னையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 27.44 லட்சம் பேர் - சென்னை பெருநகராட்சி தகவல்

சென்னையில் நேற்றைய தடுப்பூசி செலுத்தும் பணியின் விவரம்..!

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என தகவல்

முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்காக 5 லட்சம் அளித்தார் நடிகர் வடிவேலு..!

முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்காக 5 லட்சம் அளித்தார் நடிகர் வடிவேலு..! அனைவரும் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 38,792 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 624-ஆக உள்ளது உயிரிழப்பு எண்ணிக்கை

இந்தியாவில் 38,792 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 624-ஆக உள்ளது உயிரிழப்பு எண்ணிக்கை.

செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க 3 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்

செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க 3 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல். செங்கல்பட்டு மையத்தில் பாரத் பயோடெக் உட்பட 3 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா தொற்று..!

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிப்பு இல்லாத காரணத்தால் அவர் வீட்டுத்தனிமையில் இருக்க வைக்கப்பட்டுள்ளார்.

16ஆம் தேதி முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

வரும் 16ஆம் தேதி மாநில  முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிஷா முதலமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர். கொரோனா தடுப்பூசி, கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி போதுமானதாக இல்லை - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும், தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உலகளவில் கொரோனா பாதிப்பு 17 கோடியை கடந்தது

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சத்து 7 ஆயிரத்து 732 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 17 கோடியே 19 லட்சத்து 85 ஆயிரத்து 738 ஆக பதிவாகியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 கோடியே 80 லட்சத்து 48 ஆயிரத்து 949 ஆக உறுதி செய்யபப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர்களில் 78 ஆயிரத்து 554 நபர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கும் மருத்துவ சங்கம்

மக்கள் கூட்டம் அச்சமூட்டுகிறது. - இந்திய மருத்துவ சங்கம்

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையையும் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், அதை தவிர்க்கவும் முடியும் என்ற வாய்ப்பு இருந்தும் அலட்சியம் காட்டப்படுவது அச்சமூட்டுகிறது. - இந்திய மருத்துவ சங்கம்

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது - இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இன்று 36 பேர் பலி

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 2 ஆயிரத்து 652 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,40,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 2,652 ஆக உள்ளது.

கொரோனாவால் மேலும் 36 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,454 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 24 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 12 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 7 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 6 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8262 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் ஸிகா வைரஸ் பாதிப்பு 19 ஆக அதிகரிப்பு

கேரளாவில் ஸிகா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 18இல் இருந்து 19 ஆக அதிகரித்துள்ளதாகவும், திருவனந்தபுரத்தில் 73 வயதான மூதாட்டிக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் கூறியுள்ளார்.

மூன்றாம் அலை எச்சரிக்கை

விதிகளை பின்பற்றாமல் மக்கள் கூடுவது கொரோனா 3ம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிரா, கேரளாவில் சுகாதாரக்குழு ஆய்வு

மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தொடர்ந்து அதிக கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகும் நிலையில், மத்திய  அரசின் சுகாதாரக்குழு ஆய்வு நடத்த உள்ளது.

கேரளாவில் இருந்து வருபவர்களிடம் ஜிகா வைரஸுக்கான பரிசோதனை நடத்தப்படுகிறது - அமைச்சர் மா.சுப்ரமணியன்

நாட்டில் புதியதாக 37 ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் 37 ஆயிரத்து 154 பேர் கொரோனா வைரசால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு 3 கோடியே 8 லட்சத்து 74 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 724 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால். மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 50 ஆயிரத்து 899 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 36 ஆயிரத்து 649 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Background

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 2 ஆயிரத்து 458 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,46,394 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 2,458 ஆக உள்ளது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து  26 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 35 ஆயிரத்து 588 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 153 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 153 ஆக உள்ளது.

கோவை 270, ஈரோடு 175, தஞ்சை 171, சேலம் 164, திருப்பூர் 146, செங்கல்பட்டு 131, கடலூர் 95, திருச்சி 94, திருவண்ணாமலை 74, நீலகிரி 68, நாமக்கல் 66, கள்ளக்குறிச்சி 65, திருவள்ளூர் 64, கன்னியாகுமரி 55, சிவகங்கை  45, விழுப்புரம் 44, கிருஷ்ணகிரி 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவால் மேலும் 55 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,557 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 39 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 16 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 20 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8272 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக கோவையில் 8 பேர், சென்னை மற்றும் தஞ்சாவூரில் தலா 5 பேர் உயிரிழந்துள்ளனர். 11 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு  பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 30,600 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 3,021 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,62,244 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

12 வயதிற்குட்பட்ட 116 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 40,026 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26,569 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7285 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.