Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 2000க்கும் கீழ் குறைந்தது
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 971 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,34,989 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,971 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 37 ஆயிரத்து 373 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 353 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 147 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 150 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 147 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,752 ஆக அதிகரித்துள்ளது.
பல வெளிநாடுகளில் 3 ஆவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நம்மையும் 3ஆவது அலை தாக்கினால் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும். வராமல் தடுப்பதற்கு பொதுமக்கள் கைகளில்தான் இருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆப்ரிக்காவில் மிகவும் குறைந்த எண்ணிகையிலான மக்கள் மட்டுமே தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். புதிய உருமாறிய டெல்ட்டா கொரோனா தொற்று தடுப்பூசி போடாத மக்களிடம் அதிகம் பரவிக் கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் முன்னதாக எச்சரிக்கை விடுத்தது.
தடுப்பூசி போட்டுக் கொண்டதன் மூலம் இந்தியாவில் 40 கோடி பாகுபாலிகள் உருவாகியுள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 40 கோடியைக் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 499 பேர் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 38,164 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 38,660 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 38,660 ஆக குறைந்துள்ளது
இங்கிலாந்து நாட்டில் இன்று முதல் கொரோனா பொது முடக்கநிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை பொது மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டின் தினசரி தொற்று உறுதி விகிதம் 1.5 ஆக குறைந்துள்ளது. அதாவது, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் 100 நபர்களில், 2க்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது. சென்னையின் தற்போது தொற்று உறுதி விகிதம் 0.3 ஆக உள்ளது.
Background
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 971 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,34,989 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,971 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 37 ஆயிரத்து 373 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 353 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 147 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 150 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 147 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,752 ஆக அதிகரித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -