தமிழ்நாட்டில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் புதியதாக 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 31 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 13 ஆக உள்ளது.






தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்றவர்களில் 737 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 86 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது.




தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.






சென்னையில் அதிகபட்சமாக 128 நபர்கள் புதியதாக இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூரில் 120 நபர்கள் புதியதாக இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




 ஈரோட்டில் 58 நபர்களும், திருப்பூரில் 59 நபர்களும் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக இன்று எந்த கொரோனா பாதிப்பும் கண்டறியப்படவில்லை.


கொரோனாவால் கடந்த இரு ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, தற்போதுதான் ஓரளவுக்கு இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வைரசின் பாதிப்பு 23 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக இந்தியாவில் விமான நிலையங்களிலும், முக்கிய நகரங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண