தமிழ்நாட்டில் இன்று 1,29,573 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,152 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 147 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 19 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,987 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 13,531 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 1,392 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,43,431 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் 137 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 140 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 98 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 93ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 83 பேரும், திருப்பூரில் 67 பேரும், நாமகல்லில் 65 பேரும், சேலத்தில் 57 பேரும், தஞ்சையில் 51 பேரும், திருச்சியில் 46 பேரும், திருவள்ளூரில் 42 பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.