தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. 100க்கும் குறைவாக பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு தற்போது 250க்கும் மேல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 249 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகிய நிலையில், இன்று 255 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 637 ஆக பதிவாகியுள்ளது.






இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 134 பேர் வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10-ந் தேதி முதல் தமிழ்நாட்டில் 200க்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண