தமிழ்நாட்டில் நேற்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 9 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 ஆக பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 300க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 229 பேர் மட்டுமே கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 29 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருவதாலும், உயிரிழப்புகள் ஏதும் பதிவாகாத காரணத்தாலும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்